Home செய்திகள் மதுரை மதிமுக மாநாடு அரசியல் திருப்புமுனையாக அமையும் பொதுச்செயலாளர் வைகோ..

மதுரை மதிமுக மாநாடு அரசியல் திருப்புமுனையாக அமையும் பொதுச்செயலாளர் வைகோ..

by ஆசிரியர்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்து மதுரை விமான நிலையத்தில்  இருந்து வலையங்குளம் கருப்பசாமி கோயில் எதிரே உள்ள மாநாட்டுத் திடலை பார்வையிட்டார்.

செப்டம்பர் 15ல் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலையங்குளம் பகுதியில் உள்ள மாநாட்டு திடலை பார்வையிட்டார். மாநாடு அமைவிடம் மாநாட்டு தொண்டர்கள் அமருமிடம் மற்றும் வாகனம் நிற்கும் இடம் ஆகவே பகுதிகளை பார்வையிட்டு மாநாடு பந்தல் அமைப்பாளர் சிவா புதூர் பூமிநாதன் எம் எல் ஏ .மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மாரநாடு. மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி மாநில இளைஞரணி செயலாளர் பி ஜி பாண்டியன். தொண்டரணி செயலர் பாஸ்கர சேதுபதி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்யும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

மாநாட்டு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதிமுகம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதை நடத்துவதற்கு பந்தல் கலை திலகம் என்று நான் பெயர் சூட்டிய வந்து சிவா அவர்கள் பொறுப்பேற்று இருக்கின்றார்கள் இங்கே தலைவர் பூமிநாதன் தலைமையிலே எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள் ஆக இந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் இந்த மாநாடு மறுமலர்ச்சி திமுகவினுடைய திருப்புமுனை மாநாடாக அமையும்  என வைகோ கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com