Home செய்திகள் ஆசிரியர் தகுதி தேர்வு: இலவச பயிற்சி செப்.2ல் தொடக்கம் – ராமநாதபுரம் கலெக்டர் தகவல்..

ஆசிரியர் தகுதி தேர்வு: இலவச பயிற்சி செப்.2ல் தொடக்கம் – ராமநாதபுரம் கலெக்டர் தகவல்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.29- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகளான (TET) தாள் – 1 மற்றும் தாள் – 1 தேர்வை எழுத உள்ள கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed) மற்றும் பட்டயப்படிப்பு (D.TEd) முடித்தோருக்கு இந்த இரு தேர்வுகளுக்குமான பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் போன்ற பாடத்திட்டங்கள் பொதுவாகவுள்ளதால் இப்பாடங்களுக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனுபவம் மிக்க ஆசிரியர்களைக் கொண்டு 02.09-2023- முதல் ஒவ்வொரு வார இறுதி நாட்களில் நடத்தப்படவுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகும் வேலைநாடுநர்கள் தன்னார்வ பயிலும் வட்டத்தில் செயல்படும் போட்டித் தேர்வுகளுக்கான நூலக வசதியை பயன்படுத்தி கொண்டு தங்களை தயார் தேர்வுக்கு செய்து கொள்ளலாம். இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வம், விருப்பம் உள்ளோர் தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுய விவரங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இப்பயிற்சி வகுப்புகள் தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04567 – 230 160 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொண்டு இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com