கீழக்கரை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மின் கசிவால் வாடிக்கையாளர்கள் வெளியேற்றும்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்துள்ளனர் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று திடீரென மின்கசிவு ஏற்பட்டு வங்கிக்குள் புகைய ஆரம்பித்துவிட்டது இதையடுத்து அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் இது பற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது கம்ப்யூட்டர் சாதனங்களில் லேசான மின்கசிவு ஏற்பட்டு புகை வந்தது உடனடியாக மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் அனைவரையும் வெளியேற்றம் செய்துள்ளோம் தொடர்ச்சியாக மின் பழுது பார்ப்பவர்கள் வைத்து பழுது பார்த்துக் கொண்டிருக்கிறோம், பயப்படும்படியாக ஒன்றுமில்லை வங்கிகளில் உள்ள அனைத்து பொருட்களும் பத்திரமாக உள்ளது என்றார்.