அனைத்து முஸ்லீம் ஜமாத்தினருக்கும் ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்ட அழைப்பு – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடி சுகாதார பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் ஜமாத்தினருக்கும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்ட அழைப்பினை, துணை இயக்குனர், சுகாதார பணிகள் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இன்று 02.03.17 மாலை 4 மணியளவில் நடக்கவிருக்கும் இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற இருப்பதாகவும், அனைத்து முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகளும் தவறாது கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.