ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சி நடத்தும் ‘மண்ணுரிமை ஆர்ப்பாட்டம்’ – புதுக்கோட்டையில் நாளை நடக்கிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்கு குறியாக்கும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக கைவிடக் கோரி, மனித நேய மக்கள் கட்சி நடத்தும் மண்ணுரிமை ஆர்ப்பாட்டம், கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் நாளை 03.03.17 மாலை 4 மணியளவில் புதுக்கோட்டையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.