53
விருதுநகர் :
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். நேற்று இரவு விருதுநகருக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு ஆளுநர் ஆர்என்.ரவி வருகை தந்தார். முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் உருவசிலைக்கு, ஆளுநர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட ஆளுநர் ஆர்என்.ரவி, அங்கிருந்த வருகை பதிவேட்டு புத்தகத்தில் கையெழுத்திட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.