Home செய்திகள் ராமநாதபுரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

by mohan

ராமநாதபுரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை களையக் கோரி மாவட்ட திமுக., சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, முன்னாள் எம்பி., பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ.,கள் க.முருகவேல், உ.திசை வீரன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வழக்கறிஞர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.அகமது தம்பி, முன்னாள் மாவட்ட செயலர்கள் சுப.த.சம்பத்குமார்,

சுப.த. திவாகரன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் ஏ.சி.ஜீவானந்தம், நகர் செயலர்கள் கே.கார்மேகம் ( ராமநாதபுரம் ), டி.ராஜா (மண்டபம்), கே.இ.நாசர் கான் (இராமேஸ்வரம்), மாவட்ட மீனவரணி துணை செயலர் ஓடைத் தோப்பு என்.பூவேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா, அரசு ஓய்வு அதிகாரி குணசேகரன், பேராசிரியர் நக்கீரன், ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் டி.ஆர் எஸ் (எ)அய்யனார், நகர் மீனவரணி துணை அமைப்பாளர் சுல்தான் கமர்தீன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் அமல் படுத்தியகாவிரி குடிநீர் விநியோகத்தை தொய்வின்றி முறைபடுத்தப்படு வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் திமுக சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாரவிட்டால் ஒன்றிய அளவில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். திமுக., கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை (23.6.19) மாலை 5 மணி அளவில் கிழக்கு கடற்கரை பகுதிகளான எஸ்.பி.பட்டினம், தொண்டி, தேவிபட்டினம், மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் நடத்தப்படும் மனித சங்கிலி போராட்டத்தில் தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி பங்கேற்போம் என்றார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!