இராமேஸ்வரம் கடற்கரையை சுத்தம் செய்த வடமாநில சுற்றுலா பயணிகள்..

இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்து துர்நாற்றமெடுத்த டன் கணக்கிலான குப்பையை வட மாநில சுற்றுலா பயணிகள் 800 பேர் சுத்தம் செய்தனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் தங்கள் குடும்பத்துடன் இன்று மாலை 5:00 மணி அளவில் ஒன்று திரண்டனர். இதனை தொடர்ந்து கடலில் கடந்த பல மாதங்களாக கரையில் ஒதுங்கி துர்நாற்றமெடுத்து டன் கணக்கு கடற்பாசிகளை அப்புறப்படுத்தினர். பக்தர்களால் கடலில் விட்டுச்சென்ற துணிகளை கரை சேர்த்தனர். கடற்கரை ஓரம் தேங்கிய கழிவுநீரை சுத்தம் அப்புறப்படுத்தினர்.

இப்பணி இரவு 7 மணி வரை தொடர்ந்தது. சேகரித்த கடற்பாசி, துணிகளை நகராட்சி வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.