Home செய்திகள் நான்காம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக, மேம்படுத்த பட்டதாக இருக்கும்:- பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரை!

நான்காம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக, மேம்படுத்த பட்டதாக இருக்கும்:- பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரை!

by Askar

நான்காம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக, மேம்படுத்த பட்டதாக இருக்கும்:- பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரை!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிதம் கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  • கோடிக்கணக்கான மக்கள் கடுமையான சூழலை சந்தித்து வருகின்றனர்.
  • இது விட்டுவிடும் நேரமல்ல. இது வெற்றி பெற வேண்டிய நேரம்.
  • உலகின் கொள்கைகளை இந்தியா மாற்றி வருகிறது தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா இன்று உலகிலேயே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
  • பிரச்சினையை எப்படி கடந்து வந்தோமே அதேபோல் இந்தியாவால் இதையும் வெல்ல முடியும்.
  • இந்த சிக்கலை தனக்கான வாய்ப்பாக இந்தியா மாற்றிக்கொண்டிருக்கிறது.
  • உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா பயிற்சிகள் ஆகும்.
  • உலகம் என்பது ஒரே குடும்பம் தான் என்பது இந்தியாவின் நிலை நமக்கு எப்போதும் சுயநலமில்லை.
  • யாரையும் சார்ந்திராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும்.
  • தன்னிறைவு பெற்ற இந்தியா உருவாகும்.
  • எந்த ஒரு இலக்கையும் அடைவது சாத்தியமில்லை என்பதே இந்தியாவுக்கு இல்லை.
  • இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கை கொடுத்து வருகிறது.
  • மனித நேயம் தோற்காது களைப்பும் அடையாது.
  • இந்தியாவின் வளர்ச்சியில் 5 முக்கிய அம்சங்களை கொண்டது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிதம் கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சிறப்பு திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் பயன்பெறுவர்.
  • எல்லா துறைகளையும் கணக்கில் கொண்டு பொருளாதார சிறப்பு தொகுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • உள்ளூர் உற்பத்தி, விற்பனை நிநியோகம் இவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
  • எதிர்வரும் நாட்களில் இந்த திட்டம் பற்றி நிதியமைச்சர் விரிவாக அறிவிப்பார்.
  • இந்திய அரசு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் நேரடியாக ஏழைகளின் பைகளுக்கு செல்கிறது.
  • நான்காம் கட்ட ஊரடங்குக் பற்றி மே 18க்குள் உங்களுக்குள் தெரிவிக்கப்படும்.
  • மேம்படுத்தப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட ஊரடங்காக நான்காம் கட்ட ஊரடங்கு இருக்கும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!