கீழக்கரையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் – இஸ்லாமியா பள்ளியில் நகராட்சி ஆணையர் துவங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று 02.04.17 முதல் தவணையாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. கீழக்கரை நகரில் பல்வேறு பள்ளிகளிலும், சமூக கூடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் தலைமையேற்று போலியோ சொட்டு மருந்து முகாமை துவங்கி வைத்தார். கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா அரபி மதரஸாவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் முகாமில் ஏராளாமான பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து வருகின்றனர்.

பெற்றோர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை மறக்காமல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..