
மத்திய ஆளும் பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தியதை கண்டித்து கன்னியாகுமரி இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதிய முறையில் தடிக்காரன்கோணம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தள்ளுவண்டியில் கட்சி தொண்டரை அமர்த்தி வைத்து தள்ளிக் கொண்டு போகி பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் சுமார் கிலோமீட்டர் தூரம் தள்ளி சென்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார். இந்தப் ஆர்ப்பாட்டத்திற்கு தடிக்காரன்கோணம் கிராம காங்கிரஸ் தலைவர் ஜான் பால் தலைமை வைத்தார். மாவட்ட துணைச்செயலாளர் ஜீனோ முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தோவாளை வட்டார காங்கிரஸ் துணைத்தலைவர் பிலிப் ரோஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே யின் ஸ் குமார், ஜோஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.