Home செய்திகள் மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் பாரபட்சம்….விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் வாக்குறுதி!!

மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் பாரபட்சம்….விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் வாக்குறுதி!!

by ஆசிரியர்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன் தலைமையில் மாநில துணைத்தலைவர் பி.எஸ்.பாரதி அண்ணா, மாநில செயலாளர் பி.ஜீவா, மாநில துணைச்செயலாளர் எஸ்.கே.மாரியப்பன் ஆகியோர் அடங்கிய குழு 18.06.19 இன்று காலை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.ஜெ.ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்தது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பணியாளர்களை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான சட்டம் மற்றும் தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற முறையில் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதை ஆதாரங்கள் அடங்கிய கீழ்கண்ட மனுவை அளித்து சுட்டிக்காட்டப்பட்டது.

சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பொறுமையாக ஒவ்வொரு பிரச்சனையையும் கேட்டறிந்த அவர், பிரச்சனைகளைத் தீர்க்க அதிவிரைவில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும்போது விபத்து உள்ளிட்ட காரணங்களால் மாற்றுத்திறனாளிகளாக மாறி அதிகாரிகளால் கொடுமைகளை சந்தித்து வரும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனித்தனியான மனுக்களையும் அளித்தனர்.

சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனு விபரம் வருமாறு:

போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் அவர்களுக்கு.. வணக்கம்.

பொருள்: சென்னை மாநகரப் பேருந்து போக்குவரத்துக் கழக(MTC) மாற்றுத்திறனாளி ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் – தீர்வு காண கோருதல்.

ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016(Rights of Persons with Disabilities Act-2016) அமலில் உள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியம் ஊழியர் மாற்றுத்திறனாளி ஆகிவிட்டால், அவருக்குரிய சட்டப் பாதுகாப்பு குறித்து பின்வருமாறு விதிகள் உள்ளன.

20. (1) No Government establishment shall discriminate against any person with disability in any matter relating to employment:

Provided that the appropriate Government may, having regard to the type of work carried on in any establishment, by notification and subject to such conditions, if any, exempt any establishment from the provisions of this section.

(2) Every Government establishment shall provide reasonable accommodation and appropriate barrier free and conducive environment to employees with disability.

(3) No promotion shall be denied to a person merely on the ground of disability.

(4) No Government establishment shall dispense with or reduce in rank, an employee who acquires a disability during his or her service:

Provided that, if an employee after acquiring disability is not suitable for the post he was holding, shall be shifted to some other post with the same pay scale and service benefits:

Provided further that if it is not possible to adjust the employee against any post, he may be kept on a supernumerary post until a suitable post is available or he attains the age of superannuation, whichever is earlier.

ஆனால், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாகம், பணியில் இருக்கும்பொழுது மாற்றுத்திறனாளி ஆகிவிடுகிற தனது ஊழியர்களை மேற்கண்ட சட்டம் மற்றும் தொழிலாளர் நலச் சட்டத்திற்கும் விரோதமாக நடத்துவதாக ஊழியர்கள் பலர் குறை கூறுகின்றனர். குறைந்தபட்ச மனிதாபிமான அடிப்படையில்கூட நடத்தப்படுவது இல்லை என்பது அவர்களின் ஒவ்வொருவர் புகார் மனுவிலும் இருந்தும் அறிய முடிகிறது.

ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்திற்கு விரோதமாக பணிக்காலத்தில் ஊனமாகும் எந்த ஒரு பணியாளருக்கும் எழுத்துபூர்வ உத்தரவு இல்லாமல், வாய்மொழியாக பணியில் இருந்து நிறுத்தப்படுவதாகவும், விருப்ப ஓய்வில் செல்லுமாறு வற்புறுத்தப்படுவதாகவும், பணி செய்ய முடியாதபடி அதிகாரிகளால் மிரட்டப்படுவதாகவும், மாற்று இலகுவான பணி வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் கூறுகின்றனர்.

நிரந்தர ஊழியர்கள் மாற்றுத்திறனாளி ஆகிவிட்ட காரணத்தினாலேயே, அந்த ஊழியர்கள் அவ்வப்போது தலைமை அலுவலகத்திற்கு வந்து மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் அல்லது மேலாண் இயக்குனரை சந்தித்து கெஞ்சிய பிறகே, அதிகாரிகள் வாய்மொழியில் சம்பந்தப்பட்ட கிளை அதிகாரிக்கு தெரிவித்த பிறகே, அத்தக் கூலி போல பணிமனையில் பணி வழங்கப்படுகிறது.

பணி வழங்கிய நாட்களுக்கு மட்டுமே நிர்வாகம் ஊதியம் தருகிறது. இந்த முறையிலும், அதிகபட்சமாக 2 மாதங்களுக்கு பணி வழங்கிவிட்டு, 3 மாதங்களுக்கு பணி இல்லை எனக்கூறி அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர்,

வருடத்தில் பல மாதங்கள் ஊதியம் இல்லாத அத்தக் கூலிகளாகவே மாற்றுத்திறனாளி ஊழியர்கள் நடத்தப்படுவதால், அவர்களும், அவர்களின் குடும்பங்களும் கடுமையான பொருளாதார சிரமத்திற்கும், விவரிக்க முடியாத மன வேதனைக்கும் உள்ளாகின்றனர்.

நிரந்தர ஊனத்திற்கான அரசு சான்று பெற்ற பிறகும், மாற்றுத்திறனாளி ஊழியர்களை 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனைக்கு அதிகாரிகள் கட்டாயப்படுத்தி அலைக்கழிக்கின்றனர். நிரந்தரப் பணி மறுப்பதால் வாழ்நாள் முழுவதும் பணிமூப்பு இல்லாத ஊழியர்களாக நடத்தப்படுகின்றனர்.

மருத்துவப் பரிசோதனைக்கும் மாற்றுத்திறனாளி ஊழியரின் சொந்த செலவில், சொந்த விடுப்பில் செல்ல கட்டாயப்படுத்துகின்றனர். மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல மறுத்தால், பணி வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர். அரசு பொதுமருத்துவமனை மருத்துவக்குழு பரிசோதனை செய்து, சான்று வாங்கிய பிறகும், நிர்வாகத் தரப்பில் உள்ள மருத்துவர் அச்சான்றுக்கு எதிராக கருத்துக் கூறி மாற்று இலகுப்பணி வழங்க மறுக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளி ஊழியருக்கு இலகுவான பணி என்பதற்கு மாறாக, கடினமான பணி செய்ய வற்புறுத்தப்படுகின்றனர். உதாரணமாக முதுகுத் தண்டுவடம் பாதித்து, கை கால் செயல் பாதித்த ஊழியரை ஐஓசி லாரியில் ஏரி இறங்கும் வேலை செய்ய வற்புறுத்தப்பட்டிருக்கிறார். ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016, பிரிவு 23-ன்படி மாற்றுத்தறனாளிகள் சிறப்பு குறைதீர் அதிகாரி நிர்வாகத்தில் இல்லை. எனவே, உடன் நியமித்து தீர்வுகாண வேண்டும்.

தமிழக அரசு உத்தரவுகளின்படி…

தமிழக அரசின் 2007 ஆம் ஆண்டு நிதித்துறை அரசாணை (307)ன்படி மாதாந்திர போக்குவரத்துப்படி ரூ.2500/- பெரும்பாலான மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

பணிமனைக்குள் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு மட்டும் மாதாந்திர கலெக்ஷன் பேட்டா வழங்கப்படுவதில்லை. சட்டம் மற்றும் தமிழக அரசின் தலைமை செயலாளர் உத்தரவு இருந்தும் இருப்பிடத்திற்கு அருகாமையில் மாற்றுத்திறனாளி ஊழியருக்கு பணி வழங்க மறுக்கப்படுகிறது.

தமிழக அரசின் 2008 ஆம் ஆண்டு சமூகநலத்துறை அரசாணை (151)ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக ஊழியராக/தொகுப்பூதிய ஊழியராக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் இருந்தால், அவர்களை நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியத்தின்கீழ் கொண்டுவரவேண்டும்.

கோரிக்கைகள்…

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் துயரங்களை களைவதற்கும், சட்டப்படியான உரிமைகளை வழங்குவதற்கும் போக்குவரத்துத்துறை செயலாளர் அவர்கள் ஒரு சிறப்பு குறை கேட்பு கூட்டத்தை உடன் நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

சட்டப்படியான பாதுகாப்பை அனைத்து அரசுப் போக்குவரத்துக்கழக மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கும் உறுதிப்படுத்த உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தமிழ் மாநிலக்குழு சார்பில் பா. ஜான்ஸிராணி  மாநில தலைவர், எஸ். நம்புராஜன் பொதுச்செயலாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com