Home செய்திகள் நிலக்கோட்டை பகுதிகளில் 20 ரூபாய் பத்திரம் தட்டுப்பாடு வேட்பாளர்கள் அவதி..!

நிலக்கோட்டை பகுதிகளில் 20 ரூபாய் பத்திரம் தட்டுப்பாடு வேட்பாளர்கள் அவதி..!

by Askar

நிலக்கோட்டை பகுதிகளில் 20 ரூபாய் பத்திரம் தட்டுப்பாடு வேட்பாளர்கள் அவதி..!

தமிழகத்தில் 9- மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் என அனைத்து பதவிகளுக்கும் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் மனுதாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரையில் மனுத் தாக்களின் போது ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 20 ரூபாய் பத்திரத்தில் சொத்து மதிப்பு மற்றும் வேட்பாளரின் மற்ற விவரங்கள் அடங்கிய குறிப்புகளுடன் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கம், ஆனால் நேற்று முதல் தமிழக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அனைத்து ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர்களும் 20 ரூபாய் பத்திரத்தில் சொத்து மதிப்பு மற்றும் அவர்களின் சுயவிவர குறிப்புகள் அடங்கிய பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 20 ரூபாய் பத்திரத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் 20 ரூபாய் பாத்திரத்தின் தேவை அதிகமாக இருப்பதால் சில இடங்களில் பாத்திரத்தின் விலை அதிகமாக விற்பதாகவும் கூறப்படுகிறது இதனையடுத்து நிலக்கோட்டை பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் அவதியுற்று வருகின்றார்கள்.

இதனால் ஏற்கனவே தமிழக தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மனு தாக்கல் செய்வதற்கு குறுகிய கால அவகாசமே வழங்கியுள்ள நிலையில் மேலும் மனு தாக்கல் செய்ய தாமதமாக கூடும் என்பதால் அரசு 20-ரூபாய் பத்திரத்தை அதிகப்படியான விற்பனை செய்ய வேண்டு விற்பனையாளர்களிடம் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!