Home செய்திகள் 31ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பாம்பன் பாலம்..

31ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பாம்பன் பாலம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் 31ம் ஆண்டில் அடியெடித்து வைக்கிறது. பாம்பன் கடல் மீது 2.32 கி.மீ., துார பாலம் கட்டுமான பணிக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி (மறைவு 31.10.1984) அடிக்கல் நாட்டினார். அப்போதைய பிரதமர் ராஜிவ் (மறைவு 21.5.1991) 02.10.1988 இல் திறந்து வைத்தார். ரூ.19.26 கோடி செலவில் 72 தூண்களுடன் நிறுவப்பட்ட பாலத்தின் மையப்பகுதியை கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக 140 அடி உயரத்தில் இரண்டு தூண்கள் அமைக்கப்பட்டன.

கடந்த 30 ஆண்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல்கள் வடக்கு, தெற்கு திசைகளை கடந்து சென்றுள்ளன. மேலும் வட, தென் மாநில பக்தர்களை இணைக்கும் மையமாக ‘பாம்பன் பாலம்’ உள்ளது. இந்நிலையில் பாலத்தின் துஊண்கள் விரிசல் ஏற்பட்டும், தடுப்பு சுவர் சேதமடைந்தும், பால நடுவில் இரும்பு தகடுகள் சேதமடைந்தும் இருந்ததால் வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ரூ. 18.56 கோடி செலவில் பால துாண்கள், தடுப்பு சுவர்கள் கடந்த 2016 இல் செப்பனிடப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக புயல், மழை, சூறாவளியால் எவ்வித சேதமின்றி கம்பீரமாக நிற்கும் பாம்பன் பாலம் இன்று(02.10.2018) 31ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!