கீழக்கரை நகரில் பிளாஸ்டிக் பைகளின் தடை அமுலில் இருப்பதால் பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கேற்ப கை பைகளை கொண்டு வர வலியுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் பொதுமக்களுக்கு உதவும் விதமாக கீழக்கரை பழைய மீன் கடையில் மக்கள் டீம் சார்பாக கருணை சுய உதவிக்குழு தயார் செய்த பனை ஓலையால் ஆன கூடைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதை கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் அவர்கள் மீன் கடைக்கு வந்த பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
இதுகுறித்து சின்னக்கடைத் தெருவை சேர்ந்த உமர் அவர்கள் ” 35 வருடங்களுக்கு முன்பாக இந்த பனை ஓலை பட்டையில் தான் ஊரார் அனைவரும் மீன் வாங்கி செல்வோம். அதன் பின் இப்போது தான் பார்க்கிறேன். இப்பட்டைகளை கடைகளில் விலைக்கு தந்தாலும் வாங்கலாம் “என்றார்.
கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதி அவர்கள் கூறுகையில் “இப்பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு பணிகளில் ஈடுபடும் மகளீர் சுய உதவி குழுக்களை ஊக்குவிக்க மேலதிகாரிகள் கூறுகின்றனர். ஆகவே அவர்கள் எங்களை சந்தித்தால் இக் குழுவிற்கு வங்கிகளுக்கு லோன் தருவதற்கு பரிந்துரை செய்யப்படும் “என்றார்.
இந்நிகழ்வின் போது இந்தியன் சூப்பர் மார்கெட் உரிமையாளர் சமது, கீழக்கரை நுகர்வோர் சங்க செயலாளர் இபுறாகீம், Ex mc சாகுல் ஹமீது, அயூப் கான் மற்றும் மக்கள் டீம் காதர் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்: மக்கள் டீம்
You must be logged in to post a comment.