பூலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் கணணி வசதி ஏற்படுத்திட மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை..

நெல்லை மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளம் ஊராட்சி, அயோத்தியாபுரி பட்டணம், இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கணணி கல்வி படிப்பதற்கு தேவையான கம்ப்யூட்டர் வசதிகள் இல்லை, இதனால் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்தப் பள்ளிக்கு தேவையான கம்ப்யூட்டர்களை வழங்கிட தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் M.ஞானசேவியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

#Paid Promotion