கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்டதா.. புறக்கணிக்கப்படும் வடக்குத் தெரு சி.எஸ்.ஐ பள்ளி பகுதி??.. சமூக ஆர்வலர்களே கவனியுங்கள்..

கீழக்கரை வடக்குத் தெரு சி.எஸ்.ஐ பள்ளிப் பகுதி மற்றும் கொந்த கருணை அப்பா பள்ளி செல்லும்  பகுதிக்கும் கழிவு நீருக்கும் பிரிக்க முடியாத பந்தம் போல், எத்தனை புகார்கள் அளித்தாலும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.
இப்பகுதியில் வாழும் மக்கள் சாக்கடை மற்றும் கொசுக்கள் மத்தியிலுமே வாழ்ந்த வண்ணம் உள்ளார்கள்.

பல சமூக பிரச்சினைகளை கையில் எடுக்கும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், சட்ட போராளிகள் இயக்கம் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிப்பார்களா??