இராமநாதபுரத்தில் தனியார் உணவகத்தின் 6ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இலவச மருந்துவ முகாம்…

இராமநாதபுரம் ECR சாலையில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டிநாடு மெஸ் 6ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டுக்கோட்டை செட்டிநாடு மெஸ் இராமநாதபுரம் மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடந்தது
இவ்விழாவில் நாட்டுக்கோட்டை செட்டிநாடு மெஸ் நிறுவனர் டாக்டர் ஜெயகார்த்திகேயன்  வரவேற்று பேசினார். இம்முகாமை இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை இணை கண்காணிப்பாளர் பிரவீன் டோங்கரா துவக்கி வைத்தார். மேலும் முகாமில் ரோட்டரி சங்க தலைவர் ஆடிட்டர் லோகநாதன், இராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் இரவிச்சந்தி ராம வன்னி, தொழிலதிபர் காபந்துல்லா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக மைய பொது மேலாளர் மாரியம்மாள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் இராஜா, முத்துகுமார்,  ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். இம்முகாமில் டாக்டர் அறிவரசன்,  டாக்டர் தீபக் கண்ணன், டாக்டர் கனக விக்ரம் ஆகியோர் தலைமையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் முகாமில் சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் 50 க்கும் மேற்பட்டோர் உடல் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் இலவசமாக பெற்றுச் சென்றனர்.  முகாம் ஏற்பாடுகளை நாட்டுக்கோட்டை செட்டிநாடு மெஸ் இயக்குநர் சதிஸ்குமார், ஆசிரியர் ஐயப்பன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக  ஓய்வு பெற்ற காவல்துறை சார்பு ஆய்வாளர் இராஜேந்திரன் நன்றி கூறினார்.