Home செய்திகள் மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி மன்றத்தில் கணவர் தலையிட அதிகமாக இருப்பதால் கவுன்சிலர்கள் கோரிக்கை மனு

மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி மன்றத்தில் கணவர் தலையிட அதிகமாக இருப்பதால் கவுன்சிலர்கள் கோரிக்கை மனு

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாலைய கவுண்டன்பட்டி ஊராட்சியில் 9-வார்டு உறுப்பினர்கள் உள்ளார்கள்..இந்த 9-வார்டு உறுப்பினர்களில் 6 வார்டு உறுப்பினர்கள் நேற்று நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது எங்களது ஊராட்சியில் 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது . இதில் ஒன்று கூட ஊராட்சி வார்டு உறுப்பினர் களுக்கு தெரிவிக்கவில்லை எனவும், இது குறித்து ஏதேனும் மக்களுக்கு பயனுள்ள வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என வார்டு உறுப்பினர் என்ற முறையில் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி மன்ற தலைவர் மாயாக்காளிடம் கூறியும். இதற்கு தலைவர் மாயக்காள் செவிசாய்க்காமல் அவரது கணவர் ஜான் இன்னாசி என்பவர் தலையிட்டு வார்டு உறுப்பினர்களை நீங்கள் யார் கேட்பது என மிரட்டியும், வார்டு உறுப்பினர்கள் செயல்படாமல் தடுத்தும் தலைவரின் கணவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார் என கூறியும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி) செல்வராஜ் கூறியதாவது: மாலைய கவுண்டன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் மாயாக்காளின் கணவர் செயல்பாடு குறித்து பல்வேறு கோரி புகார் மனுக்கள் வந்துள்ளது . இது குறித்து தக்க நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனத் தெரிவித்த உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!