Home செய்திகள் நிலக்கோட்டை ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளுக்கு வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு கொடுத்து தண்ணீர் வழங்க இருப்பதாக ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தகவல்

நிலக்கோட்டை ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளுக்கு வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு கொடுத்து தண்ணீர் வழங்க இருப்பதாக ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தகவல்

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரெஜினா நாயகம் தலைமையிலும், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், ஆணையாளர் லாரன்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி) செல்வராஜ ஆகியோர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது..கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:

கோட்டைச்சாமி திமுக கவுன்சிலர்: நிலக்கோட்டை ஒன்றியத்தில் ஆண்டுதோறும் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனை முழுமையாக போக்க ஏற்கனவே காவிரி குடிநீர் திட்டத்தில் சேர்க்கப்பட்ட கிராமங்களைத் தவிர அனைத்து கிராமங்களுக்கும் காவேரி குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தீர்மான நகலை அனுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன்: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் காவேரி குடிநீர் திட்ட தண்ணீர் வழங்க நிறைவேற்றி அதன் நகலை முதலமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என தகவல் தெரிவித்தார்.

அறிவழகன் திமுக கவுன்சிலர்: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த நலத்திட்டங்கள் மற்றும் திட்ட பணிகள் குறித்து ஒளிவுமறைவின்றி அனைத்து செயல்பாடுகளும் ஒன்றிய கவுன்சிலர் களுக்கு தெளிவாகப் புரியும்படி உண்மைத்தன்மையை வெளியிடும்படி கேட்டுக்கொண்டார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி : ( செல்வராஜ்:): நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த அனைத்து திட்டப் பணிகளும் அடிப்படையிலும் அத்தியாவசிய பணிகளை இன் அடிப்படையிலேயே செய்து முடிக்கப்பட்டுள்ளது இதற்கு முழுமையான அறிக்கையை அலுவலகத்தில் உள்ளது தேவைப்பட்டால் கேட்டு வாங்கிக் கொள்ளவும் என பதில் தெரிவித்தார்.

கணேசன் சுயேச்சை கவுன்சிலர்: நிலக்கோட்டையில் உள்ள கட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட ஏலத்தில் விடப்பட்ட வாடகை கடைகள் தற்போது அதிகாரிகளால் பேசி முடிக்க படுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகளை பகிரங்க ஏலத்திற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம்: எந்த கடையாக இருந்தாலும் அரசின் வருவாய் கேற்றவாறு உடனடியாக ஏலத்திற்கு கொண்டு வர தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நல்லதம்பி அதிமுக கவுன்சிலர்: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் குடிநீர் வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்..

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரெஜினா நாயகம்: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள் பச்ச மலையான் கோட்டை, கோட்டூர், சிலுக்குவார்பட்டி, மட்டப்பாறை, பிள்ளையார்நத்தம், சித்தர்கள் நத்தம், நூத்துலாபுரம், எத்திலோடு, ஜம்புதுரைக்கோட்டை ஆகிய 7 ஊராட்சிகளுக்கும் அரசின் மத்திய மாநில அரசு நிதியுடன் வீடுகள் தோறும் அனைத்து வீடுகளுக்கும் அரசின் செலவிலேயே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் வழங்கப்படும் திட்டம் முதல் கட்ட நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்தார்.

ஒன்றிய கவுன்சிலர்கள் 20 பேர்களும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.இக்கூட்டத்தில் 20 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!