Home செய்திகள் கொள்ளிடம்-மயிலாடுதுறை தனியார் பேருந்தில் இலவச பயணம்

கொள்ளிடம்-மயிலாடுதுறை தனியார் பேருந்தில் இலவச பயணம்

by mohan

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தனியார் பேருந்து ஒன்று இலவசமாக இயக்கப்படுகின்றது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை  தடுப்பதற்கு அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இன்றுடன் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது.இந்த பொதுமுடக்கத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் அரசு பேருந்து சேவைகள் 60சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. அதன்பின்னர் 9-ஆம் தேதிமுதல் தனியார் பேருந்து சேவைகளும் இயக்கப்படுகிறது.

முகக்கவசம் அணிந்து வரும் பயணிகளை மட்டும் அனுமதித்து 60சதவீத பயணிகளை கொண்டு தனியார் பேருந்துகளை இயக்கிட அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரே மண்டலத்திற்குள் மட்டும் பேருந்துகள் இயக்க வேண்டும் அவ்வாறு இயக்கினால் உரிய வருவாய் இன்றி நஷ்டம் ஏற்படும் என்பதால் சீர்காழி, சிதம்பரம், மயிலாடுதுறை வழித்தடத்தில் பல்வேறு  தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் சிதம்பரம், சீர்காழி, பட்டவர்த்தி வழித்தடத்தில் மயிலாடுதுறை வரை இயக்கப்படும் தனியார் பேருந்து நிர்வாகம் ஒன்று கொரோனா பொதுமுடக்கத்திலும் தங்களது பயணிகளுக்கு உதவிட முடிவு செய்தது.இதற்காக புதன்கிழமை 17-ஆம் தேதி முதல் வரும் 24-ஆம்  தேதி வரை 8 நாட்கள் கொள்ளிடம் சீர்காழி, பட்டவர்த்தி, மயிலாடுதுறை உள்ளிட்ட வழித்தடங்களில் பயணக் கட்டணம் ஏதுமில்லாமல் இலவசமாக இயக்க முடிவு செய்து பேருந்தை இயக்கி வருகிறது.

மேலும் அந்த பேருந்தில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை  பின்பற்றி பயணிகளை (60 சதவீதம் மட்டும்) அமரவைத்து பேருந்து சேவை  இயக்கப்படுகிறது.கொரோனா பொது முடக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்திடும்  தனியார் பேருந்தின்  சேவையை சீர்காழி,  கொள்ளிடம்,பட்டவர்த்தி,மயிலாடுதுறை பகுதி பயணிகள்  பாராட்டி வரவேற்செய்தியாளர்

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!