Home செய்திகள் இணைய வழியில் சித்திரைக் கவிதை கொண்டாட்டம்; உலகத் தமிழர்களுக்கு கவிஞர் பேரா அழைப்பு..

இணைய வழியில் சித்திரைக் கவிதை கொண்டாட்டம்; உலகத் தமிழர்களுக்கு கவிஞர் பேரா அழைப்பு..

by mohan

நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கமும், திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிகளும் இணைந்து நடத்தும் சித்திரைக் கவிதைக் கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 14-அன்று இணையவழியில் நடைபெறுகிறது. இது குறித்து திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிகளின் தமிழ் உயராய்வுத் துறைகளும், திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கமும் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக அறிவுசார் நிகழ்ச்சிகள், பன்னாட்டுக் கருத்தரங்கம், கவியரங்கங்களை இணைந்து நடத்திட செய்யப்பட்டுள்ள மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, முதல் நிகழ்வாக வரும் ஏப்ரல் 14-அன்று இணைய வழியில் சித்திரைக் கவிதைக் கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பா.வேலம்மாள் தலைமை தாங்குகிறார். நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி முன்னிலை வகிக்கிறார். விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு தமிழ் உயராய்வுத் துறைத் தலைவர் முனைவர் ம.கவிதா வரவேற்புரை வழங்குகிறார். சங்ககிரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ் உயராய்வுத் துறைத் தலைவர் முனைவர் செ.ஜெயந்தி தொடக்கவுரையாற்றுகிறார். சென்னை கவிதை உறவு ஆசிரியர் கவிஞர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் நிறைவுரை வழங்குகிறார். கல்லூரி மாணவிகள் சீ.கீர்த்திகா,ம.மகா, து.திவ்யா,ப.சிவரஞ்சனி, யு.நவமதி, எஸ்.பிரியதர்ஷினி, ச.தீபா,சி.மானிஷா, மற்றும் சு.மோனிகா ஆகியோர் கவிதைக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சித்திரைக் கவிதை பாடுகிறார்கள். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா நன்றியுரையும், தொகுப்புரையும் வழங்குகிறார். இந்நிகழ்ச்சி வருகின்ற ஏப்ரல் 14-அன்று மாலை 5.00மணிக்கு ஜூம் செயலியின் வழியாக நடைபெறுகிறது. உலகத் தமிழர்கள் திரளாக நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளுமாறு நெல்லை பொதிகை தமிழ்சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!