ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரில் அரங்கேறும் மோசடிகள்- பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட நெல்லை காவல் துணை ஆணையர் வேண்டுகோள்…

தமிழகத்தில் பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கும் போக்கு அதிகரித்துவிட்டது.இதன் காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பெறப்படும் பொருள்களின் தரம் குறித்து நமக்கு சரியாக தெரிவதில்லை. ஆன்லைன் மூலம் பல புதுவித மோசடிகளும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.ஆன்லைன் மோசடி குறித்து தமிழ்நாடு காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை பொது மக்களிடையே செய்து வருகின்றனர். இருப்பினும் குற்றங்கள் நடந்துகொண்டே உள்ளது. இந்நிலையில் நெல்லையில் நேற்று ஆன்லைன் ஷாப்பிங் செய்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து XUV கார் பரிசளிப்பதாக கூறி ரிஜிஸ்ட்ரேஷன் செலவுக்கு 12500 கேட்டு பிரபல நிறுவனத்தின் பெயரில் நெல்லை மக்களிடம் தொடர்பு கொண்டு மோசடி செய்ய முயற்சித்துள்ளனர். பொது மக்கள் இதுபோன்ற போலியான கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும் என நெல்லை மாநகர் காவல் துணை ஆணையர் திரு.சரவணன்( சட்டம் & ஒழுங்கு ) கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..