நெல்லையில் தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சிக்கான ஒளிப்பதிவு-‘உண்மை ஒளி’ என்ற தலைப்பில் பாடம் நடத்திய தமிழாசிரியர்…

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிப்பதிவு நெல்லையில் நடைபெற்றது.ஏழாம் வகுப்பிற்கான ஒளிப் பதிவில் சங்கர் நகரில் உள்ள சங்கர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்ரமணியன்’ உண்மை ஒளி பள்ளி மறுதிறப்பு என்கிற 2 விரிவான பகுதியை நடத்தினார். இது ஒளிப்பதிவு செய்யப்பட்டது.இந்த பணிகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆண்டோபூ பாலராயன் ,பேராசிரியர்.சௌந்தரராஜன், பேராசிரியர் ராஜேஷ், தொழில்நுட்ப பணியாளர் சூர்யா, ஒளிப்பதிவு சாலமன் ஆகியோர் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்றது.

இதனை முதன்மைக்கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் ,பள்ளி தலைமையாசிரியர்கள் மாரியப்பன்,பெர்னாட், கல்வி ஒருங்கிணைந்த திட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வநாயகம் ஆகியோர் பார்வையிட்டனர்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்