கீழக்கரை அல்-மதரஸத்துல் முஹம்மதியாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி

கீழக்கரை வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) வின் கீழ் சிறப்பாக இயங்கி வரும் சிறுவர்களுக்கான அல் மதரஸத்துல் முஹம்மதியா இஸ்லாமிய பாட சாலையில் நேற்று 17.08.2017 இரவு 8.30 மணியளவில் மதரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மதராசாவின் தலைமை நிர்வாகியும், சிறந்த மார்க்க கல்வியாளரான பேராசிரியர் ஹுசைன் ஆஷிஃப் தலைமை தாங்கினார்.

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பொருளாளர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் சிறப்புரை ஆற்றினார். மதரஸா மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டிய ஒழுக்க நெறிகளும் பெற்றோர்களின் கடமைகளும் குறித்து மதரஸாவின் ஆலீம் அபூபக்கர் மன்பஈ விளக்கவுரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மதரஸா சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் மார்க்க கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்ரஸா மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வடக்கு தெரு சமூக நல அமைப்பின் நிர்வாகி பஷீர் அஹமது மற்றும் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

#Paid Promotion