Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை சட்டப்போராளி மீது கொலை வெறி தாக்குதல்.. ரவுடி கும்பலை உடனடியாக கைது செய்ய சட்ட விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை..

கீழக்கரை சட்டப்போராளி மீது கொலை வெறி தாக்குதல்.. ரவுடி கும்பலை உடனடியாக கைது செய்ய சட்ட விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை..

by ஆசிரியர்

கீழக்கரை சட்ட விழிப்புணவு இயக்கத்தில் உறுப்பினராக இருக்கும் வடக்குத் தெருவைச் சார்ந்த முசம்மில் என்பவர் கீழக்கரை நகரின் பல்வேறு பிரச்சனைகளுக்காக சட்ட வழியிலான பல்வேறு முயற்சிகளை ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருபவர். இவர் சவுதியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று நோன்பு திறக்கும் நேரத்தில் வீட்டு வாசலில் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு தொந்தரவு எற்படும் வகையில் இருசக்கர வாகனத்தின் ஒலிபெருக்கி சத்தம் வந்துள்ளது.  இதை கண்டு முசம்மில் வெளியே சென்ற பார்த்த பொழுது அதே தெருவைச் சார்ந்த ஆபித் அலி என்பவர் நின்றுள்ளார்.  இதை தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. பின்னர் வீட்டில் உள்ளவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார்கள்.

இச்சசம்பவத்திற்கு பிறகு முசம்மில் வீட்டில் இருந்து வெளியில் சென்று விட்டு திரும்பிய பொழுது மூன்றுக்கும் மேற்பட்ட இள வயது நபர்கள் கடுமையாக கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இது சம்பந்தமாக முசம்மில் கீழை நியூஸ் நிருபர் கார்த்திக்கு கொடுத்த பிரத்யேக பேட்டி:- (கீழே இணைக்கப்பட்டுள்ளது)

இது சம்பந்தமாக சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞரும், கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவருமான சாலிஹ் ஹுசைன் கூறியதாவது, “இந்த புனித ரமலான் மாதத்தில் மனிததன்மையற்ற இந்த மிருகத்தனமான கொலை வெறி தாக்குதல் மிகவும் கண்டிக்கதக்கது.  தாக்கபட்டுள்ள முசம்மில் வெளிநாட்டில் இருந்தாலும் உள்ளூர் விசயங்களில் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு மிகவும் ஒத்துழைக்க கூடியவர்.  இவருக்கு  ஏற்பட்டுள்ள இந்த கொடுஞ் செயலை சட்ட விழிப்புணர்வு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் இந்த சம்பவத்தை கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட அனைத்து இந்திய சட்டத்தின் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளில்  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ரவுடி கும்பலை சிறையில் அடைத்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.  இதற்கான அனைத்து முயற்சிகளையும் சட்ட ரீதியாக கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கம் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படும். இந்த முயற்சி சட்டப் போராளி என்பதால் மட்டும் எடுக்கப்படவில்லை,  எந்த ஒரு சாமானிய மனிதன் பாதிக்கப்பட்டாலும் கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கம் சட்ட ரீதியாக அனைத்து உதவிகளையும் செய்யும்” என கூறி முடித்தார்.

TS 7 Lungies

You may also like

3 comments

Ahamed wassaf June 15, 2018 - 5:01 am

accused name is missing kindly add it

ஆசிரியர் June 17, 2018 - 3:38 pm

சகோதரரே இச்செய்தி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடைப்படையில் பதியப்பட்டது மேலும் வீடியோவில் பதியப்பட்டிருக்கும் கருத்து அது அவருடைய சொந்த கருத்து ஆக இது கீழை நியூஸ் நிர்வாகத்தின் கருத்து கிடையாது. எங்களுக்கு ஆதாரப்பூர்வமான தகவல் அதாவது காவல்துறை அறிக்கை போன்றவை இல்லாமல் ஒருவர் கூறும் வார்த்தையை வைத்து ஒரு நபரை குற்றவாளி என பதிவிட முடியாது. இது சம்பந்தமாக குற்றம் சாட்டம்பட்டவர்களின் வாக்குமூலம் கிடைத்தாலும் நாங்கள் பதிவிட தயாராக உள்ளோம். தங்களின் கருத்து பதிவுக்கு மிக்க நன்றி..
Dear Brother,
This news is based on the information provided by the affected person, the expression in the videos are his point of view. We can not come to the conclusion based on his statement alone. We can mention the so called accused names if we get police FIR report or any other solid evidence for the same. We posted this news as an incident & not to support any party. We the media want to be unbiased and our aim to provide the news only. Hope you understand our position.

Sadiq MJ June 16, 2018 - 2:33 am

தம்மாம் டீம் தலைவர் என்கிற முறையில் எங்கள் டீம் செயல் வீரர் சட்டப்போராளி முஸம்மில் அவர்கள் தாக்கப்பட்ட செய்தியறிந்து வருத்தத்தினையும் எங்களது கண்டனத்தையும் இதன் மூலம் பதிவு செய்கிறேன், மேலும் இத்தருணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி முறையான நடவடிக்கை எடுத்து அவர்கள் தண்டிக்கப்பட ஆவண செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடராவண்ணம் இருக்க இந்த நடவடிக்கை ஒரு பாடமாக அமையும். தம்மாமில் இருந்து சட்டப்போராளி *சாதிக் M J*

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!