Home செய்திகள் மஹாராஷ்ட்ராவின் எழில் மிகு அழகைக் கண்டு களிக்க தமிழ் நாட்டினருக்கு, மஹாராஷ்ட்ரா சுற்றுலாத் துறை அழைப்பு!

மஹாராஷ்ட்ராவின் எழில் மிகு அழகைக் கண்டு களிக்க தமிழ் நாட்டினருக்கு, மஹாராஷ்ட்ரா சுற்றுலாத் துறை அழைப்பு!

by mohan

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் சுற்றுலாத் துறை, தமிழ் நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ரோடுஷோ (Roadshow) ஒன்றை இன்று நடத்தியது. மதுரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலமாக மராட்டிய மாநிலத்தின் சுற்றுலா மற்றும் சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சரான ஆதித்ய தாக்கரே உரையாற்றினார். அவர் தனது உரையில் அம்மாநில சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்தும், திட்டங்கள் பற்றியும் விளக்கினார். அதோடு, அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தளங்கள் குறித்தும், புதிதாக அம்மாநிலத்தில் வடிவம் பெற்று வரும் சுற்றுலாத் திட்டங்கள் பற்றியும், அவை தொடர்பாக அம்மாநில அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் குறித்தும் விளக்கி கூறினார்.

அப்போது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகத்தின் சுற்றுலாப் பயண ஏற்பாட்டாளர்கள் (Tour Operators), முகவர்கள் (Agents), தமிழக அரசு அதிகாரிகள் இருந்தனர். மஹாராஷ்ட்ரா அரசின் சுற்றுலாத் துறையின் இயக்குனர் திரு. திலிப் கவுடா (Mr. Dilip Gawade) ஐ.ஏ.எஸ். உரையாற்றினார்.மராட்டிய மாநில சுற்றுலாத் துறை இயக்குனர்  திலிப் கவுடா பேசியபோது, யூனெஸ்கோ அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ள, உலகாளவிய பாரம்பரியச் சின்னங்கள் பல மராட்டிய மாநிலத்தில் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்வதானால், குயோரியா தேவாலயம், ஃப்ளோரா நீரூற்று, எலிஃபெண்டா குகைகள் சிலவற்றைக் குறிப்பிடலாம். அரபிக்கடலை ஒட்டி சுமார் 720 கிலோமீட்டர் நீள கடற்கரைப் பகுதியையும் கொண்டது, மராட்டிய மாநிலம். ஜூஹு, மல்வான், முராட் ஜன்ஜிரா, மற்றும் கஷிட் போன்ற இடங்களில் உள்ள கடற்கரைகளில் – கடல்நீரில் நடைபெறும் பல திகைப்பூட்டும் நிகழ்வுகளும் உள்ளன. மும்பை நகரத்தில் உள்ள பல்வேறு கடற்கரைகள் தவிர, ராய்கட்…. ரத்னகிரி… மற்றும் சிந்துதுர்க் போன்ற இடங்களில் – கடற்கரைப் பகுதிகளில் நடைபெறும் பல சாகச நிகழ்ச்சிகளை காணும் வாய்ப்புகளோடு, நீரில் மிதந்தபடியே பங்கேற்கும் விளையாட்டுகளும் (Water Sports events) உள்ளன. தர்கர்லி என்ற ஒரு சிற்றூரில் ஸ்குபா டைவிங் (Scuba diving) எனக் குறிப்பிடப்படும் அலாதியான விளையாட்டுக்கு மிகச் சிறந்த களம் அமைந்துள்ளது. சுனாமி தீவு பல்வேறு வகை பாய்மரப் படகுப் போட்டி அனுபவங்களை வழங்க காத்திருக்கின்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!