Home செய்திகள் மக்கள்பாதை இயக்கம் சார்பாக 80 மீனவ குடும்பங்களுக்கு கொரோனா பேரிடர் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் வழங்கல்.

மக்கள்பாதை இயக்கம் சார்பாக 80 மீனவ குடும்பங்களுக்கு கொரோனா பேரிடர் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் வழங்கல்.

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சி வடகாடு கிராமமானது இராமேஸ்வரத்தில் இருந்து 5 கி.மீ தூரமுள்ள மீனவ கிராமம். தற்போது கொரோனா பேரிடர் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இம்மீனவ மக்கள் மீன்பிடி தொழில் இன்றி எவ்வித உதவியும் கிடைக்கப்பெறாமல் இருப்பதாக மக்கள்பாதை இயக்கத்திற்கு தகவல் கிடைத்தது .மேலும் சமூக வலைதளங்களில் உதவி கோரி செய்திகள் பகிரப்பட்டது. மக்கள் பாதை இயக்க மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சார்பாக நேரடி மக்கள் சந்திப்பும், உதவும் நல்லெண்ணம் கொண்டோரிடம் உதவிகள் கோரப்பட்டது.

இதன் விளைவாக இராமேஸ்வரத்தில் இயங்கிவரும் சுபாஸ் நகைக்கடையின் ஸ்தாபகர் சுபாஸ் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் மகன் தாஸ் அவர்களின் உதவியுடன் வடகாடு கிராமத்தில் உள்ள 80 குடும்பங்களுக்கும் 10 கிலோ அரிசி நிவாரணப் பொருளாக இன்று 11.05.2020 வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மக்கள்பாதை மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் இராமு, இராமேஸ்வரம் பொறுப்பாளர் ஆனந்தராஜ் , கோரல் பவுன்டேஷன் நம்புராஜ், தன்னார்வலர்கள் முத்துமுனியன், சிலுவை அந்தோணி, தினேஷ், குமரன், கனேஷ், தாளேஸ்வரன், ஆனந்தகுமார், ராஜேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.சுபாஸ் நகைக்கடை உரிமையாளர் தாஸ் அவர்களுக்கு மரியாதை நிமித்தமாக மக்கள் பாதை மண்டபம் ஒன்றியம் சார்பாக நன்றி தெரிவித்து கெளரவிப்பு செய்யப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!