Home செய்திகள் சொல்லுங்கள்;நான் 10 லட்சம் தருகிறேன் 15 வயது மாணவி ஜெயஸ்ரீயின் உயிரை திருப்பித் தாருங்கள்:-டாக்டர் சிங்க தமிழச்சி ஆவேசம்..

சொல்லுங்கள்;நான் 10 லட்சம் தருகிறேன் 15 வயது மாணவி ஜெயஸ்ரீயின் உயிரை திருப்பித் தாருங்கள்:-டாக்டர் சிங்க தமிழச்சி ஆவேசம்..

by Askar

ஏழை மக்களின் வாழ்க்கையில் பந்தாடுகிற மத்திய மாநில அரசுக்கு இந்தப் பதிவு:

மக்களை காக்க வேண்டிய அரசாங்கம் மறைமுக தோற்றத்தில் கொல்லுகிறதோ என்ற அச்சத்திலே பயணிக்கிறோம்.

இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் அவலம். கொரோனா தாக்கத்தை மிஞ்சிய வறுமை மரணங்கள்!

நீங்கள் அதிரடியாக பிறப்பிக்கும் சட்டங்களை கடைபிடிக்கிறோம். வேலையின்றி, உணவின்றி வறுமையின் கோரப் புயலிலும் பல உயிர்களை இழந்து, நம்பி கெட்டோம் உங்களை.

கொரோனா தொற்று:

உலகை அச்சுறுத்தியதால் 2 மாத கால லாக் டவுன்,

மக்களின் நலனில் அக்கறை வைத்துதான் 144 ஊடரங்கு உத்தரவு என நம்பி கெட்டோம்.

ஆனால் காவலர்களுக்கும் , கொரோனா பணியில் இருந்தவர்களை வாட்டியெடுத்ததுதான் மிச்சம்.

சாமானியர்களை பசியால், வறுமையால், பயத்தால் அழித்துக் கொண்டு வரும் அரசே இன்னும் உங்களை நம்பி அழிகிறோம்.

லாக் டவுன் போர்வையில் நீங்க மக்களுக்கு கொடுத்த 1000 ரூ இனி வரும் தலைமுறை. அரசின் சாதனையை எடுத்துறைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பாதுகாப்பு கொடுத்தால் மட்டும் உயிரை காக்கலாம் என கங்கனம் கட்ட வேண்டாம். பசியின் கொடுமையிலும் உங்களின் பயத்தின் கொடுமையிலும் பல ஆயிர கணக்கான உயிர்களை இழந்து கொண்டு இருந்தாலும்.. மதுவில்லா தமிழகமாக மாறியதை நினைத்து மகிழ்ந்தோம்.

அனால் நீங்களும் மதுவுக்கு அடிமையானது அம்பலமானது மே 7 . இது தான் உங்கள் மக்கள் பாதுகாப்பின் லட்சணமா?

கால் வயிறு உணவை உண்டாவது நிம்மதியாய் உறங்கிய ஏழை மக்களின் வாழ்க்கையில் சூறாவளி வீசச் செய்து பல உயிர்களை பலியாக்கி விட்டீர்கள் .

Tasmac திறப்பிற்கு காரணம் வேறு, அரசாங்கத்திடம் வருமானம் இல்லை, கள்ளச்சாராயம் பெருகி வருது. உயிரிழப்பை கட்டுப்படுத்த Tasmac திறந்தோம் என மடத்தனமான உங்கள் பதிலால், செயலால்.

எங்கள் பெண்களின் தாலிகளை அறுத்த பெருமை உங்களையே சேரும். பல குடும்பங்கள் சந்திக்கு வந்த பெருமை உங்களையே சேரும். பல உயிர்களை பலி வாங்கிய பெருமை உங்களையே சேரும். மதி கெட்ட அரசாங்கமே;

அரசின் (இலவசம்) அதாவது வாழ்வாதார பொருட்கள் பட்டியலிடுகிறேன் 1000 ரூ அரிசி 10 கிலோ, 1 கிலோ எண்ணெய், 1 கிலோ சர்க்கரை .

850 க்கு சிலிண்டர் நீங்க கொடுத்த ரேஷன் பொருட்களை வாங்க ரு50 இதர பொருட்கள். மீதம் உள்ள 100 ரூ என்ன செய்யலாம்னு யோசிக்கிறோம்.

ருசிக்கு உணவு வேண்டாம்… மக்கள் பசியையாற்ற உணவு கொடுத்தீர்கள் (அம்மா உணவகங்களில் மறுக்கவில்லை அதிலும் ஊழல். அம்மா உணவகமேயில்லா எத்தனையோ பகுதிகள். நம்பி இன்னும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.

நேற்று விழுப்புரம் மாவட்டத்திலே நடந்த கொடூரம். அரசு பொறுப்பேற்குமா? மது வெறியால் ஒரு பச்சை மண்ணை தீக்கு இறையாக்கிட்டிங்களே. உங்க அனுதாப 5 லட்சம் அவள் உயிரை திரும்பத் தருமா…?

சொல்லுங்கள்;நான் 10 லட்சம் தருகிறேன் 15 வயது மாணவி ஜெயஸ்ரீயின் உயிரை திருப்பித் தாருங்கள்?

இன்னும் எத்தனையோ உயிர்கள் வெளிவராமலே மரணித்துக் கொண்டு தான் இருக்கின்றன சிலரின் அரசியல் சாயம் போர்த்திய மனித மிருகங்களால்.

தமிழக அரசே:மூடிய Tasmac ஐ நிரந்தரமாக மூடு இல்லையென்றால், பெரியளவில் மக்கள் புரட்சி வெடிக்கும் அபாயத்தை சந்திக்க நேரிடும். இது சவால் அல்ல எச்சரிக்கை.

தமிழக அரசே; தமிழக மக்களின் நலனை புறக்கணிக்கும் மத்திய அரசின் எடுப்பார் கைப்பிள்ளையாகாதே.

உங்களை நம்பிய தமிழக மக்களை காப்பாற்ற தன்னிச்சையாக முடிவெடுத்து காப்பாற்றுங்கள். காவல்துறையை கைக்கூலியாக்காதீர்கள். ஒவ்வொரு அரசு பாதுகாப்பு பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடு. கொரோனா தொற்றால் தனிமை படுத்தப்பட்ட மக்களின்மேல் அக்கறை யெடுங்கள். சமூக வளைதளங்களிலே பல பதிவுகள் கவனக் குறைவின் அவலங்கள். பசுமையாய் பலர் பசியாற்றிய எம் விவசாயிகள் பட்டினியில் மடியும் அவலத்தை மாற்றுங்கள். Tasmac ஐ நிரந்தரமாக மூடு. வருமானத்திற்கு பால் உற்பத்தியை முயற்சிக்கலாமே. மது வெறியால் தீ க்கு இறையாகிய எங்கள் மகள் ஜெயஸ்ரீயின் மரணம் இறுதியாகட்டும். இப்பாதகத்தை செய்த குடி வெறி பிடித்த மிருகங்களை காலம் தாழ்த்தாமல் தூக்கிலிடுங்கள். மக்களுக்காகத்தானே அரசாங்கம்?

இனியாவது கவனம் கொள்வீர்கள் என நம்புகிறேன் இந்த சிங்கத்தமிழச்சி,

இது கர்ஜனையல்ல தமிழ் அன்னையின் கடமையோடு கொண்ட சினம்.

இது கோரிக்கையல்ல எங்கள் உரிமை ..

Dr.சிங்கத்தமிழச்சி.

தேசிய ஒறுங்கிணைப்பாளர் [ தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம்]

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com