தமிழ்நாடு அரசு மற்றும் நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் ஜமாத், கீழக்கரை அனைத்து ஜமாத் இனைந்து நடத்திய பொது மருத்துவ முகாம்..

கீழக்கரையில் நேற்று (13/07/2020) மற்றும் இன்று (14/07/2020)  தமிழ்நாடு அரசு மற்றும் நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் ஜமாத், கீழக்கரை அனைத்து ஜமாத் இனைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் நடுத் தெரு ஜும்ஆ மஸ்ஜித் சங்கம் வளாகத்தில் நடைபெற்றது.

கீழக்கரை டவுன் காஜி மௌலவி Dr.A.M.M காதர் பக்ஸ் ஹுஸைன் சித்திக்கி தலைமையில், நடுத் தெரு ஜும்ஆ மஸ்ஜித் துணைத் தலைவர் A.M.S சாகுல் ஹமீது ஹாஜியார், செயலாளர் S.M.K முகைதீன் ஃபாருக், துணை செயலாளர் A.M.S ஹபீப் முஹம்மத் தம்பி, பொருளாளர் A.S ஜமால் யூசுப், முன்னாள் செயலாளர், A.Q காதர் செய்யது இப்ராகிம், கிழக்குத் தெரு ஜமாத் துணைத் தலைவர் முஹம்மது அஜிஹர், தெற்குத் தெரு ஜமாஅத் துணை செயலாளர் சுபைர் முன்னிலையில் தொடங்கிவைக்கப்பட்டது

இந்த மருத்துவ முகாமில் 150 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை ஜும்ஆ மஸ்ஜித் துணை செயலாளர் ஹபீப் முஹம்மத் தம்பி மற்றும் நடுத் தெரு ஜும்மா மஸ்ஜித் சங்கம் நிர்வாகி ஹுசைன் அல்லா பக்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.