Home செய்திகள் 40கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ள இராமநாதபுரம் அரசு மருத்துவர்கள்..

40கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ள இராமநாதபுரம் அரசு மருத்துவர்கள்..

by ஆசிரியர்

இராமநாதபுரத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவருக்கு 40 கிலோ விதைப்பைக்கட்டியை அறுவைச்சிகிச்சை மூலம் உடலில் இருந்து அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் புதன்கிழமை சாதனை புரிந்துள்ளனர்.

இராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சு.மோகன்(66)இவர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றியவர். இவரது உடலில் 40 கிலோ விதைப்பைக்கட்டி இருந்து மிகவும் அவதிப்பட்டு வந்தார். இது குறித்து உராமநாபுரம் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் இதை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விடலாம். முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் செலவே இல்லாமல் அறுûச்சிகிச்சை நல்ல முறையில் செய்வதாக உறுதியும் அளித்துள்ளனர்.

இதனையடுத்து இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 28.8.2018 அன்று சேர்க்கப்பட்டார்.இம்மாதம் 4 ஆம் தேதி காலையில் அவருக்கு ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை சிறுநீரக அறுவைச்சிகிச்சை நிபுனர் டாக்டர் கே.அறிவழகன், அறுவைச்சிகிச்சை மருத்துவர் என்.தினேஷ் முகில்,மயக்க மருந்து மருத்துவர் எம்.சாகுல்ஹமீது பாதுஷா, செவிலியர் கன்னியம்மாள் ஆகியோர் அறுவைச்சிகிச்சை செய்து உடலில் ஒட்டியிருந்த 40 கிலோ விதைப்பைக் கட்டியை அகற்றினார்கள்.

இது குறித்து அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர்.பி.கே.ஹவஹர்லால் கூறியது, “இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் இதுவரை 6 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றியுள்ளோம்.  தற்போது முதல் முறையாக இராமநாதபுரத்தில் 40 கிலோ எடையுள்ள வெதர்ப்பை கட்டியை அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறோம். இதற்கு முன்பு மணிப்பாலில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 32 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றியிருக்கிறார்கள். அதற்குப் பின்பு இந்தியாவிலேயே அதிக எடையுள்ள கட்டி இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் தான் அகற்றப்பட்டுள்ளது.

மேலும் அறுவைச்சிகிச்சை செய்யப்படும் நபர் சு.மோகனுக்கு இருதய வீக்கம் இருந்து இருதயம் பலஹீனமாகவும், முதியவராகவும் இருந்ததால் அறுவைச்சிகிச்சை செய்வது ஒரு சவாலாகவே இருந்தது. தொடர்ந்து இரண்டரை மணி நேரம் அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. மொத்தம் 6 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது.

சிறுநீரக அறுவைச்சிகிச்சை நிபுணர் டாக்டர்.பி.கே.ஜவஹர்லால், அறுவைச்சிகிச்சை மருத்துவர் என்.தினேஷ்முகில், மயக்க மருந்து மருத்துவர் எம்.சாகுல்ஹமீது பாதுஷா ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்றார். இது குறித்து சிறுநீரக அறுவைச்சிகிச்சை நிபுணர் கே.அறிவழகன் கூறியதாவது, “காலில் வீக்கம் ஏற்பட்டால் அது யானைக்கால் நோய் என்பதைப் போல இதுவும் ஒரு வகையில் யானைக்கால் நோயைப் போன்றதாகும். உடலில் சுரக்கம் நிணநீர்ப்பாதையை கிருமி தாக்கி அதை அடைக்கும் போது வீக்கம் ஏற்படுகிறது. அந்த வீக்கமே கொஞ்சம், கொஞ்சமாக பெரிதாகி விடும். பாதிக்கப்பட்ட முதியவர் சு.மோகன் கடந்த 6 மாதமாகவே படுத்த படுக்கையாகவே இருந்திருக்கிறார். மல,ஜலம் கழிக்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். இந்த வீக்கம் தொடர்ந்து 8 ஆண்டுகள் இருந்து மிகவும் அவதிப்படுவதாகவும் கூறியதால் முதியவருக்கு முதலில் அறுவை சிகிச்சையால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதை எடுத்துக்கூறி பின்னர் அறுவை சிகிச்சை செய்தோம். தனியார் மருத்துவமனையாக இருந்தால் ரூ.2 லட்சத்துக்கும் மேலாக செலவாகி இருக்கும். முதியவருக்கு செலவே இல்லாமல் அறுவைச்சிகிச்சை செய்து தற்போது பூரணமாக குணமடைந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்றார்.

இது குறித்து அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சு.மோகன் கூறியது, “உடலில் ஏற்கனவே இரு முறை விதைப்பை வீங்கி அறுவைச்சிகிச்சை செய்தேன்.மீண்டும் வளர்ந்து 40 கிலோ அளவுக்கு எடையுடய கட்டியாகி விட்டது. சிறுநீர்ப்பாதையே அடைத்து சிறுநீர் போக முடியாமல் நான் பட்ட அவதியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அறுவைச்சிகிச்சை செய்வதற்கு பயந்து கொண்டிருந்த நிலையில் மருத்துவர் கே.அறிவழகன் எனக்கு கொடுத்த தைரியம் மிகவும் நிம்மதியை தந்தது. அதன்படி பயமும் இல்லாமல்,செலவும் இல்லாமல் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன்.தற்போது நலமுடன் இருக்கிறேன் என்றார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!