மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே, காடு பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது, இப் பள்ளியில் சுமார் 200 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். 1956ஆம் ஆண்டு நான்கு வகுப்பறைகள் கொண்ட பழமையான கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதை மாணவ மாணவியர் பெற்றோர் மற்றும் கிராம பொதுமக்கள் ஆபத்தான கட்டடத்தை அகற்ற கல்வி அதிகாரிக்கு வேண்டுகோள் விடுத்தனர் .மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமிநாதன், கிராம பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, முற்றிலும் சேதம் அடைந்த பழமை வகுப்பறைக் கட்டிடத்தை பாதுகாப்பாக அகற்ற உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில், மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி ஆலோசனையின் பேரில், ஜேசிபி மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டது. இதற்கு மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் கிராம பொதுமக்கள் கல்வி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.அதே இடத்தில் புதிதாக வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும். இதனால், ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கு ஏற்ப தனித்தனி வகுப்பறைகள் மாணவ மாணவியர்கள் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஆகையால், புதிய வகுப்பறைகள் உடனடியாக கட்டித் தரவேண்டும் என்று சமூக கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.