Home செய்திகள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரையில் பேட்டி

வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரையில் பேட்டி

by mohan

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செருப்பு தைக்கும் கைவினை கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பிரபல நந்தினி ரியல் எஸ்டேட் உரிமையாளர் பிரபு ஏற்பாட்டின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட செருப்புத் தைக்கும் கைவினைக் கலைஞர்கள் மற்றும் இஸ்திரி தொழிலாளர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அரிசி பருப்பு பலசரக்கு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கினார். தொடர்ந்து இஸ்திரி தொழிலாளி பெண்மணி ஒருவருக்கு இஸ்திரி பெட்டி வழங்கப்பட்டது

இதில் உதவி போலீஸ் கமிஷனர் ஜெயக்குமார் உதவி போலீஸ் கமிஷனர் லில்லி கிரேஸ் ஆடிட்டர் சேதுமாதவா பள்ளி தாளாளர் பார்த்தசாரதி அரிமா சங்கரலிங்கம் நெல்லை பாலு, பள்ளி தலைமையாசிரியர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறுகையில்,முதல்வரின் போர்க்கால நடவடிக்கை காரணமாக எல்லா மாவட்டங்களிலும் சிறப்பான நோய் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தேவையான தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அது கண்காணிக்க பட்டும் வருகிறது. தளர்வுகளை பொதுமக்கள் சரியாக பயன்படுத்தி விழிப்போடும், பாதுகாப்போடும் இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.பொருளாதார ஞானத்தோடு மதி நுட்பத்தோடு தொலைநோக்கு பார்வையோடு தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.தொழில் தொடங்க எப்போதும் என்னை அணுகலாம் என அறிவித்த இந்தியாவின் ஒரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழகம் சொர்க்க புரியாக உள்ளது.தமிழகத்தில் எளிமையாக தொழில் தொடங்க பல்வேறு சீர்த்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் 27 சதவீத பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் மாநிலத்தில் தமிழகமும் ஒன்றாக உள்ளது.தமிழக சுகாதாரத்துறை பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகே தனியார் மருத்துவமனையில் கொரானா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

களத்தில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஊக்கமும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மண்டலங்களில் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் செயல்படுவார்கள்.கொரானா பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கையை தமிழக சுகாதாரத்துறை குறைத்து காட்டுவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு,ஜனநாயகத்தின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். பேரிடர் காலத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அரசியல் கருத்து தெரிவிக்க வேண்டும்.அரசியல் காரணங்களுக்காக அரசை குறை கூற கூடாது. அரசியல் உள்நோக்கத்தோடு குறை கூறுகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!