Home செய்திகள் நோய் பாதிக்கப்பட்ட நபர்கள் இருந்த பகுதிகளை கட்டுப்படுத்தும் திட்டம்

நோய் பாதிக்கப்பட்ட நபர்கள் இருந்த பகுதிகளை கட்டுப்படுத்தும் திட்டம்

by mohan

மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் என 15 நபர்கள் கண்டறியப்பட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது . அவர்களின் உறவினர்கள் / தொடர்புடைய நபர்கள் என 379 நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவரவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர் . இவர்களது வீடுகளில் நோட்டிஸ்கள் ஒட்டப்பட்டு தினசரி வருவாய்த்துறை , சுகாதாரத்துறை , மற்றும் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் . கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி ( Containment areas ) என அறிவிக்கப்பட்டு மதுரை மாநகரில் மேலமடை , நரிமேடு , மற்றும் தபால்தந்தி நகர் , மதுரை புறநகரில் மேலூர் , எழுமலை , மற்றும் திருமங்கலம் ஆகிய பகுதிகள் முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது . இப்பகுதிகளில் வசிக்கும் 67 , 748 குடும்பங்களில் உள்ள 2 , 92 , 759 நபர்களை கண்காணித்திட 854 சுகாதாரத்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன . இவர்கள் தினந்தோறும் சுழற்சி முறையில் நேரில் சென்று மேற்படி நபர்களை சந்தித்து நோய் தொற்று அறிகுறிகள் ஏதும் உள்ளனவா என்பதை கண்காணித்து வருகின்றனர் . மருத்துவ கட்டமைப்பு வசதிகள் : மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் ( COVID – 19 ) தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது . அதன்படி மதுரை மாவட்டத்தில் தற்போது மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு 150 படுக்கை வசதிகளுடனும் , 120 வென்டிலேட்டர்கள் வசதிகளுடனும் உள்ளது . தனியார் மருத்துவமனைகளில் 1 , 000 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன . போதுமான அளவில் முகக்கவசம் , பாதுகாப்பு உடைகள் கைவசம் உள்ளன . சுகாதார நடவடிக்கைகள் : மதுரை மாவட்டம் முழுவதும் தினசரி பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க கிருமிநாசினி மருந்துகள் 2 , 633 லிட்டர்கள் தெளிக்கப்படுகின்றன . 41 , 142 கிலோகிராம் பிளிச்சிங் பவுடர்கள் தூவப்படுகின்றன . 4 , 307 லிட்டர்கள் லைசால் கொண்டு பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் தூய்மைப்படுத்தப்படுகின்றன . காய்கறி , மீன் , மற்றும் இறைச்சி சந்தைகள் பரவலான இடங்களில் அமைத்தல் : மதுரை மாநகரில் காய்கறி சந்தைகளில் பொதுமக்கள் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 14 இடங்களில் காய்கறி சந்தைகள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்கவும் , சமூக இடைவெளி கடைபிடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளன . மதுரை மாநகரில் 100 வார்டுகளில் 46 வாகனங்களின் மூலம் ( நடமாடும் காய்கறி கடை ) பொதுமக்களுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன . இதனால் பொதுமக்கள் காய்கறிகள் கிடைக்காமல் அவதிப்படாமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது . மதுரை மாநகரில் மீன் சந்தைகள் ஓபுளா படித்துரை அருகில் சில்லரை விற்பனை செய்யவும் , மதுரை மாட்டுத்தாவணி எம் . ஜி . ஆர் . பேருந்து நிலையத்தில் மொத்த விற்பனை செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன . வெளிமாநில தொழிலாளர்கள் பராமரிப்பு நடவடிக்கைகள் : மதுரை மாவட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் 2 , 920 நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் மூலமாகவே உணவு வழங்கவும் , இதர தொழிலாளர்களுக்கு வட்டாட்சியர்கள் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கவும் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன . ஆதரவற்றோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் நலன் பேணுதல் : மதுரை மாநகரில் ஆதரவற்றோர் / வீடு இல்லாதவர்கள் 410 நபர்களுக்கு தினசரி 3 வேளைகள் உணவு , இருப்பிடம் , தேவையான மருந்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன . மதுரை சக்கிமங்கலம் கிராமத்தில் ஆதரவற்ற நரிக்குறவர்கள் / பார்வையற்றவர்கள் 419 நபர்களுக்கு உணவுப்பொருட்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . எனவே மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அனைத்து வகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன . பொதுமக்கள் அரசு தெரிவித்த விதிமுறைகளின்படி தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமலும் , சமுக இடைவெளி கடைபிடித்தும் , அவ்வப்போது தங்கள் கைகளை சோப்பு நீரால் சுத்தம் செய்தும் , கொரோனா நோய் தொற்று வராமல் இருக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைக்குமாறு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்  வினய்  கேட்டுக் கொள்கிறார் . மாவட்ட ஆட்சியர் , மதுரை .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!