Home செய்திகள் உள்ளபடி சொல்லுங்கள் – நேற்று பிரதமரின் வீடியோ வெளியீட்டைப் பார்த்ததும் உங்களுக்குக் கொஞ்சம் ரிலீஃப் ஏற்பட்டதா இல்லையா?- மூத்த பத்திரிகையாளர்’குமரேசன்’..

உள்ளபடி சொல்லுங்கள் – நேற்று பிரதமரின் வீடியோ வெளியீட்டைப் பார்த்ததும் உங்களுக்குக் கொஞ்சம் ரிலீஃப் ஏற்பட்டதா இல்லையா?- மூத்த பத்திரிகையாளர்’குமரேசன்’..

by Askar

உள்ளபடி சொல்லுங்கள் – நேற்று பிரதமரின் வீடியோ வெளியீட்டைப் பார்த்ததும் உங்களுக்குக் கொஞ்சம் ரிலீஃப் ஏற்பட்டதா இல்லையா? காலை 9 மணிக்கு அதை வெளியிடுகிறார் என்று முந்தாநாள் பகலிலிருந்து அறிவிப்பு வந்ததிலிருந்து எல்லோரும் (ஆளுங்கட்சிக்காரர்கள் உட்பட) எங்கே ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஏதாவது சொல்வாரோ என்று பதக் பதக்கென்றுதான் இருந்தார்கள். ஆனால் விளக்கேற்றக் கேட்டுக்கொள்வதோடு அது போனதேயென்று ஓரளவு நிம்மதியடைந்தார்கள்.

அதற்குப் பிறகுதான் கைதட்டலைத் தொடர்ந்து இப்படி விளக்கேற்றும் சடங்கா என்று பலரும் எதிர்வினையாற்றத் தொடங்கினார்கள். வாதமாக, பகடியாக, கோபமாக என்று அது தொடர்கிறது. இவ்வாறு மக்களின் உணர்வை ஒரு சடங்காக்குவதன் நோக்கம் பற்றியும் கேள்விகள் வருகின்றன.

இதையெல்லாம் தாண்டி ஒரு சிந்தனை மனதில் ஓடுகிறது. பொதுவாக இந்திய மக்களின் வீடுகளில் விளக்கேற்றுதல் ஒரு நெடுங்காலப் பண்பாடு சார்ந்த வழக்கமாக இருந்து வருகிறது. குத்துவிளக்கு, மெழுகுவர்த்தி என வடிவங்கள் மாறினாலும் ஆகப்பெரும்பாலான வீடுகளில் விளக்கேற்றப்படுகிறது. வீடு முழுக்க இரவைப் பகலாக்கும் நவீன மின் விளக்குகள் ஒளிர்ந்தாலும் “பொழுது சாய்ஞ்சிருச்சு, இன்னும் விளக்கேத்தலையா” என்று கேட்கப்படுவது சர்வசாதாரணம். வீடுகளில் உள்ள சாமி உருவங்கள், நீத்தார் படங்கள் ஆகியவற்றின் முன்பாக விளக்கு/மெழுகுவர்த்தி ஏற்றப்படுகிறது.

இந்த மரபை, இன்றைய மக்கள் உணர்வோடு இணைத்து, கூட்டு வலிமையை வெளிப்படுத்தும் முயற்சியாகச் சித்தரிப்பது உற்று நோக்கப்பட்டாக வேண்டும்.

இது பிரதமரின் வேண்டுகோள்தான், கட்டளையல்ல என்றாலும் இவ்வாறு சடங்காக்குவதன் நுண்ணரசியல் என்னவென்று ஆழ்ந்து விவாதிக்கப்பட்டாக வேண்டும்.

கொரோனா ஓயட்டும். ஊர் திறக்கட்டும்.

-குமரேசன்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com