தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து மதிமுக நிர்வாகிகள் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். புளியங்குடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், வேல் மனோஜ், போத்திராஜ், சுப்பிரமணியன் உள்ளிட்ட 6 பேர் இன்று அதிகாலை குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் திரும்பும் வழியில் புன்னையாபுரம் அருகே லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அதிகாலை 3:30 மணி அளவில் நடந்த இந்த சம்பவம் புளியங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மதிமுக நிர்வாகிகளான துணைப் பொதுச்செயலாளர் திமு ராஜேந்திரன், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலைக்குமார், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், மாணவரணி மாநில துணைச் செயலாளர் பாலகுமார் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முதல்வரை தொடர்பு கொண்ட எம்எல்ஏ சதன் திருமலை குமார், உயிரிழந்த 6 பேரின் உடற்கூறு ஆய்வை விரைந்து முடித்து உடல்களை அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தினார். இளைஞர்கள் 6 பேர் உயிரிழப்பால் புளியங்குடி பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.