
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள திருப்புல்ணானி ஒன்றியத்திற்குட்பட்ட மாயாகுளம் ஊராட்சியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இன்று 6.10.2020 அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் திருப்புல்லானி ஒன்றிய வட்டார மருத்துவர் டாக்டர் ராசிக்தீன், ஊராட்சி தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாயாகுளம் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு செவிலியர்கள் தங்கி பணியாற்றுவார்கள். அவசர காலங்களில் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மொத்தம் 30 லட்ச ரூபாய் செலவில் அதில்
ரூ.25 லட்சம் செலவில் புதிய கட்டிடமும், ரூ.5 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் மற்றும் இதர பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் 6 மாதத்தில் முடிவடையும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.