கீழக்கிடாரம் கிராமத்தில் நோன்பு கஞ்சி வழங்க ‘கீழை நியூஸ்’ நிர்வாகம் பங்களிப்பு

ர்வாடியை அடுத்த வாலிநோக்கம் அருகாமையில் இருக்கும் கீழக்கிடாரம் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றனர். வருடம் தோறும் ரமலான் மாதத்தில் அந்த பகுதியில் இருக்கும் புதுப் பள்ளிவாசல் ஜமாஅத்  மூலம் பெறப்படும் நன்கொடைகள் மூலம் பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி காய்ச்சி வழங்குவது வழக்கம். ஆனால் இந்த வருடம் நோன்பு கஞ்சி வழங்க போதுமான பொருளாதார வசதி கிடைக்காததால் நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி வழங்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது.
இந்நிலையில் சபந்தப்பட்ட கீழக்கிடாரம் புதுப் பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகத்தினர் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பஷீர் அஹமதுவை தொடர்பு கொண்டு நோன்பு கஞ்சிக்கான பொருளாதாரம் சம்பந்தமாக உதவி கோரினர். இந்த தகவல் சமூக வலைத்தளங்கள் மூலம் நட்பு வட்டங்களுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. இதனையடுத்து கீழக்கிடாரம் கிராமத்தில் நோன்பு கஞ்சி வழங்க ‘கீழை நியூஸ்’ நிர்வாகம் சார்பாக ரூ.12000/- பங்களிப்பினை அனுப்பி வைத்தனர்.  
இந்த தொகையினை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பஷீர் அஹமது சமபந்தப்பட்ட கீழக்கிடாரம் புதுப் பள்ளிவாசல் ஜமாஅத் செயலாளர் நஜீப் கானிடம் வழங்கினார். போதிய பொருளாதாரம் இல்லாததால் தடைபட்டு இருந்த நோன்பு கஞ்சி விநியோகம் இறைவன் அருளால் நேற்று முதல் சிறப்பாக மீண்டும் துவங்கியுள்ளது.
கீழாக்கிடாரம் கிராமத்தில் இருக்கும் புதுப் பள்ளிவாசலில் தொடர்ந்து தங்கு தடையின்றி நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி கிடைத்திட நீங்களும் உங்களுடைய மேலான பங்களிப்பினை வழங்க கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பஷீர் அஹமதுவை கீழ் காணும் எண்ணில் தொடர்பு கொண்டு உதவலாம்.
சேகு பஷீர் அஹமது : 8012711656