
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை கீழக்கரை டிடிவி அணி நகர் செயலாளர் கே.ஆர்.சுரேஷ் முன்னாள் கவுன்சிலர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், முன்னாள் வாரியதலைவர் ஜி.முனியசாமி, மகளிர் அணி இணை செயலாளர் கவிதா, ஒன்றிய செயலாளர் முத்து செல்வம், மாவட்ட பிரதிநிதி டாக்டர்.சிவக்குமார், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் சங்கர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து மறவர் தெரு 1வது வார்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள், பரிசு பொருட்களை முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் வழங்கினர். மேலும் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரியாணி உணவாக வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.