மலேசியாவில் உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..

நாளை (25-02-2018) மலேசியாவில் உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

இதற்காக சென்னையில் இருந்து மலேசியா கிளம்பினார். அப்பொழுது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:-மலேசியாவில் 25-ந்தேதி உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்து இருக்கிறார்கள். அழைப்பை ஏற்று செல்கிறேன். காவிரிநீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படுத்த வேண்டும் என்றுதான் தீர்மானம் நிறைவேற்றி பிரதமரை வலியுறுத்தி உள்ளோம்” என கூறினார்.

இன்று (24-02-2018) திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மலேசியா சென்றடைந்தார்.