Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -16

( கி.பி 1299-1922)

டெல்லியிற்க்குள் தைமூரின் முழுப்படைகளும் நுழைந்தன.

கட்டிடங்களில் தளபதிகள் தங்கிக்கொண்டனர். மேலும் வீரர்களுக்கு தங்க கூடாரங்களும் அமைக்கப்பட்டன.

தைமூரின் பயத்தால் டெல்லி சுல்தான் முஹம்மதுஷாவும் தளபதி மல்லுகானும் தப்பி ஓடிவிட்டனர்.

அரசவை கூட்டப்பட்டது. டெல்லியின் முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் வந்து தைமூருக்கு பணிந்து சென்றார்கள்.

தைமூருக்கு யானையை கண்டாலே பயம்.100 க்கு மேற்பட்ட யானைகள் தைமூரின் முன்பு வந்து மண்டியிட்டன. தைமூருக்கு யானைகளை பார்ப்பது விநோதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒரு யானையின் மீது அமர்ந்து டெல்லியை மகிழ்ச்சியுடன் வலம் வந்தார்.

அதில் சில யானைகளை சில அரசர்களுக்கு பரிசாக அனுப்பி வைத்த தைமூர், ஆசியா முழுவதும் தன் வசமாகிவிட்டதை அறிவிக்க வைத்தார்.

நீண்ட பயணம் செய்ததால் தைமூரின் வீரர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். டெல்லி கருவூலத்தில் இருந்த செல்வங்களை தைமூர் தன்னுடன் எடுத்துச் செல்ல திட்டமிட்டார்.

நாடுகளை பிடித்து செல்வங்களை கொள்ளையடிக்கவே மன்னர்கள் இதுபோன்ற படை எடுப்புகளை நடத்தினர் என்பதை புரியவேண்டும்.

போர் நடந்ததே முஸ்லீம் மன்னர்களுக்குள் என்பதையும் கொல்லப்பட்டவர்கள் இருபுறத்திலும் முஸ்லீம்களே என்பதையும் அறிய வேண்டும்.

தைமூர் அரண்மனையில் இருக்க தைமூரின் தளபதிகளும், வீரர்களும் டெல்லியின் செல்வங்களை கொள்ளை அடித்தனர்.

எதிர்த்தவர்களை கொன்றனர். தலைகளை வெட்டி பிரமிடுகளைப்போல அடுக்கி வைத்ததாக கூறுவதெல்லாம் கொஞ்சம் ஓவராக இருந்தாலும்,

போர்,செல்வங்களை எடுத்துக் கொள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடும் போது மக்களை பயமுறுத்த போர்வீரர்கள் இதுபோன்ற பயமுறுத்தல் உத்திகளை கையாளுவது சர்வசாதாரணமாக நடைபெறுவதாகும்.

இரண்டு வாரங்களே டெல்லியில் தங்கியிருந்த தைமூரை பல இளவரசர்கள் சரணடைந்து காணிக்கைகளை செலுத்தினர்.

தைமூர் டெல்லியில் எந்த ஆட்சியாளரையும் நியமிக்கவில்லை. வடசிந்து மற்றும் பஞ்சாபின் ஆளுநராக கிஸ்ருகானை நியமித்தார்.

பொதுவாக தைமூருக்கு வெற்றி கொண்ட பகுதிகளில் ஆள்வதில் பிரியம் இல்லை.அடுத்த பகுதிக்கு நகர்ந்துவிடுவார்.

அவர் தனது தலைநகர் சாமர்கந்துவிற்கு தனது சில படைப்பிரிவுகளையும் சில தளபதிகளையும் பணித்து, அவர்கள் போர் செல்வங்களையும் அள்ளிச் செல்லவும்,

சாமர்கந்தை சிறந்த நகரமாக கட்டமைக்க டெல்லியின் கைவினை கலைஞர்களையும் அழைத்து செல்லவும் உத்தரவிட்டார்.

அவர்கள் தப்பிவிடாமல் இருக்க கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.

டெல்லி தைமூரின் படையால் சீரழிந்த தாகவும் அது சீராக பல ஆண்டுகள் ஆன தாகவும், டெல்லியின் தெருக்களில் பிணங்கள் குவிந்து இருந்ததாகவும்,

அங்கு பிணந்திண்ணி கழுகுகளும், கழுதைப்புலிகளும் சுற்றி திரிந்ததாகவும், கழுதை புலிகள் கத்துவது பேய் கத்துவதைப்போல இருந்ததால்,

மனிதர்கள் பயந்ததாகவும், டெல்லி தெருக்களில் இரண்டு மாதங்கள் ஆள்நடமாட்டமே இல்லை எனவும் எழுதி வைத்திருப்பது உண்மையாக தெரியவில்லை.

தொழுகை நடத்துகிற தைமூர் குறிப்பாக தனது மதமக்களாகிய முஸ்லீம்கள் நிறைந்திருக்கிற டெல்லியை இவ்வளவு மோசமாக சீரழித்தார் என்பது பொய் புரட்டுகள் ஆகும்.

உஸ்மானிய பேரரசர் பயாசித்தைப்பற்றி தைமூரிடம் சிற்றரசர்கள் நேரிடையாக வந்து குறைகள் கூறினார்கள். அது தைமூரின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!