இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட வாலிபால் போட்டியில் வெற்றி…

இராமநாதபுரத்தில் மாவட்ட அளவில் பல வயது பிரிவினருக்கு மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. இப்போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் பல்வேறு பள்ளி அணிகள் மோதின, இதில் இறுதி ஆட்டத்தில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் மண்டபம் பள்ளி அணியினருடன் மோதி வெற்றி பெற்றனர். அதே போல் இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் சித்தார்கோட்டை பள்ளியிடம் இறுதி சுற்றில் மோதி வெற்றி பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை இஸ்லாமியா பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாராட்டினர்.