கீழக்கரை பழைய போலீஸ் ஸ்டேசனில் இருந்து உள்ளே செல்லும் பிரதான சாலை சி.எஸ்.ஐ பள்ளி சாலையாகும். கீழக்கரையில் பல அதிகாரிகள் மாறி விட்டனர், ஆனால் அந்த சாலையின் அவல நிலை மட்டும் மாறவேயில்லை. ஒரு புறம் காலி மனையில் கொட்டப்பட்ட குப்பைகள், மறுபுறம் பல வருடங்கள் மூடாமலே கிடக்கும் வாறுகால்.
இன்று(07-08-2017) மாலை திறந்து கிடக்கும் கால்வாயில் நாய் ஒன்று விழுந்து சாக்கடையில் மூழ்கியது. சில மாதங்களுக்கு முன்பு மாடு ஒன்று சாக்கடையில் விழுந்து காயம் ஏற்பட்டது. அதே போல் ஆட்டோ ஒன்று அதே பகுதியில் சிக்கி சேதப்பட்டது.
இவ்வழியாக தினமும் ஏராளமான பயணிகள், வயோதிகர்கள், பள்ளி குழந்தைகள் சென்ற வண்ணம் உள்ளனர். ஓவ்வொரு நாளும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில்தான் சென்ற வண்ணம் உள்ளனர். ஆனால் நகராட்சியோ இவ்விஷயத்தில் மெத்தன போக்கையே பையாள்கிறது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் ஒழிய நகராட்சி விழிக்காது என்றே தோன்றுகிறது.
1 comment
கீழக்கரை நகராட்சி ஆதாயம் இருந்தால் மட்டுமே எந்த பணிகளிலும் ஈடுபடுவார்கள். பிறப்பு சான்றிதழ் வாங்க லஞ்சம் கேட்கும் கேடுகெட்ட நகராட்சி. மிகவும் சோம்பேறித்தனமான ஊழியர்கள்.அதை நகராட்சி என்று சொல்வதற்கு பதிலாக லஞ்ச லாவண்யம் கொளிக்கும் கேளிக்க்கை விடுதி என்று சொல்லலாம்
Comments are closed.