ஆயக்குடி பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு-முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்…

சுரண்டை அருகே உள்ள ஆய்க்குடியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

தென்காசி மாவட்டம் ஆயக்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் .சு.பழனிச்சாமி, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் மற்றும் திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் .ப.குற்றாலிங்கம் ஆகியோர்களின் அறிவுரையின் படி, கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாமல் வீதிகளில் நடமாடும் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வாகனங்களில் செல்லும் நபர்களுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டு வசூல் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர். ஜா.மாணிக்கராஜ் தலைமையில் ஆய்க்குடி காவல் நிலைய ஆய்வாளர் காவலர்கள் மற்றும் பேரூராட்சி அனைத்து பணியாளர்களுடன் இணைந்து ஆய்க்குடி பேரூராட்சி பகுதிகளான மெயின்ரோடு, வணிக நிறுவனங்கள் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் முக கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அதில் 75 பேர்கள் மாஸ்க் அணியாதது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.7500/ அபராதம் வசூலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு முறை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்