Home செய்திகள்கீழக்கரை செய்திகள் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ” All That You Wanted to Know About Internet Of Things(IoT)” இணையவழி பயிலரங்கம்..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ” All That You Wanted to Know About Internet Of Things(IoT)” இணையவழி பயிலரங்கம்..

by ஆசிரியர்

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ” All That You Wanted to Know About Internet of Things” என்னும் தலைப்பில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான மூன்று நாள் பயிலரங்கம் 24/06/2020 முதல் தெடங்கி 26/06/2020 வரை நடைபெற்றது.

அரபித்துறை துறைத் தலைவர் M.ரெய்ஹானத்தில் அதவியா இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிராபானு கமால் இன்றைய சூழ்நிலையில் இணையத்தின் வளர்ச்சியால் மனிதன் அடையும் நன்மை, தீமைகள் பற்றி எடுத்துரைத்தார். இணையத்தின் வளர்ச்சியால் மனிதன் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு தனது தேவையை நிறைவேற்றும் சாதகமானத் தன்மையைப்போல் வங்கியில் உள்ள பணம் திருடப்படுதல், ஆன்லைனில் வாங்கப்படும் பொருட்களில் ஏமாற்றுதல் போன்ற பாதகமான தன்மையும் உள்ளதை சுட்டிக்காட்டியதுடன், விவசாயத்துறையிலும் இணையத்தை பயன்படுத்தி விளைச்சலை பெருக்கி முழுவளர்ச்சி நிலையை அடைய முடியும் என்று எடுத்துரைத்துத் தலைமையுரையாற்றிப் பயிலரங்கிணை தொடங்கி வைத்தார்.

அதற்கு முன் கணினி பயன்பாட்டியல் துறைத் துறைத்தலைவர் அன்வர்R.ஷாஹின் அனைவரையும் வரவேற்கும் விதமாக வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்புப் பேச்சாளர் Mr. Easwaran Ram Vice President (Project) With Synprosoft, Zoho Authorized Partner, Chennai. இணையத்தின் பரிணாம வளர்ச்சியால் மனித வாழ்வியலில் ஏற்பட்ட வளர்ச்சிக் குறித்துப் பல்வேறு கருத்துக்களைத் தொகுத்து, மூன்று அமர்வுகளாக வழங்கினார். முதல் அமர்வில் இணையத்தின் பரிணாம வளர்ச்சி குறித்தும், அந்த பரிணாம வளர்ச்சியால் மனிதன் அடையும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இரண்டாவது அமர்வில் இணையத்தை பயன்படுத்தி மின்சாதனங்களை தானியங்கி முறையில் இயக்குவதால் மனிதனின் தேவைகள் எவ்வாறு நிறைவடைகிறது என்பது குறித்தும், மூன்றாவது அமர்வில் இணையத்தை பயன்படுத்துவதால் மனிதன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும், அவற்றை சரிசெய்ய கையாளப்பட வேண்டிய உத்தி முறைகள் பற்றியும் எடுத்துரைத்துச் சிறப்புரையாற்றினார். மூன்று நாட்கள் நடைபெற்றப் பயிலரங்கில் 300-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியா மட்டுமல்லாது உலகளவில் (சவுதி, ஹாங்காங் ) போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாகக் கணினி பயன்பாட்டியல்த் துறைப் பேராசிரியர் S. விமலா பாரதி நன்றியுரை வழங்கியதுடன் இப்பயிலரங்கம் நிறைவு பெற்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!