ராமேஸ்வரத்தில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

ராமேஸ்வரம் எம்ஆர்டி நகரைச் சேர்ந்தவர் சந்திரன், 50. மீன்பிடி தொழிலாளி. இவரது மகன்கள் சதீஷ்(21), இருளேஸ்வரன் (20). நேற்றிரவு இவர்கள் இருவருக்கும் இடையே போதையில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை அவர்களின் தாயார் விலக்கச் சென்றார். அப்போது தாயை சதீஷ் அடிக்கப் பாய்ந்தார். இதனை தடுக்க தந்தை சந்திரன் மீது இருளேஸ்வரன் கோபமடைந்தார். இது தொடர்பாக இருளேஸ்வரனுக்கும் சந்திரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருளேஸ்வரன், சந்திரனை அப்பகுதியில் உள்ள அங்காள ஈஸ்வரி கோயில் வாசல் முன் இழுத்து வந்து கீழே தள்ளினார். தலையில் இரும்பு கம்பி, உருட்டு கட்டையால் அடித்து கொன்றார். ராமேஸ்வரம் துறைமுகம் போலீசார் இருளேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..