Home செய்திகள்மாநில செய்திகள் ED, IT, CBI ரெய்டு போன்ற சிக்கல்களை எதிர்கொண்ட நிறுவனங்கள் அடுத்த சில நாட்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் கொடுத்துள்ளன என்பது தெரியவந்துள்ளது..!

ED, IT, CBI ரெய்டு போன்ற சிக்கல்களை எதிர்கொண்ட நிறுவனங்கள் அடுத்த சில நாட்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் கொடுத்துள்ளன என்பது தெரியவந்துள்ளது..!

by Askar

ED, IT, CBI ரெய்டு போன்ற சிக்கல்களை எதிர்கொண்ட நிறுவனங்கள் அடுத்த சில நாட்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் கொடுத்துள்ளன என்பது தெரியவந்துள்ளது..!

Future Gaming and Hotel Services நிறுவனத்திற்கு எதிரான பணமோசடி புகாரில் 2022 ஏப்ரல் 2 அன்று ED சோதனை நடத்திய நிலையில், அடுத்த சில நாட்களில் (7 ஏப்ரல், 2022) தேர்தல் பத்திரங்களை வாங்கி இருக்கிறது.

டெல்லி மதுபான வழக்கில் Aurobindo Pharma நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் 2022 நவம்பர் 11 அன்று கைது செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில் (15 நவம்பர் 2022) தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளது.

Shirdi Sai Electricals நிறுவனத்தில் 2023 டிசம்பர் 20 அன்று வருமானவரித்துறை சோதனை நடத்திய நிலையில், அடுத்த சில வாரங்களில் (11, ஜன 2024) தேர்தல் பத்திரங்களை வாங்கி இருக்கிறது.

கடந்த 2024 ஜனவரி 10 அன்று தேர்தல் பத்திரங்களை வாங்கிய Torrent Power நிறுவனம், அடுத்த 2 மாதங்களில்(7 மார்ச் 2024) மகாராஷ்டிரா மாநில அரசிடம் இருந்து சுமார் 1540 கோடி மதிப்பிலான காண்ட்ராக்ட்டை பெற்றுள்ளது.

கடந்த 2023 நவம்பர் 11 அன்று Dr.Reddy’s நிறுவனத்திற்கு தொடர்பான இடங்களில் வருவாய்த்துறை சோதனை நடத்திய நிலையில், அடுத்த சில நாட்களில் (17 நவம்பர் 2023) தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

கடந்த 2022 மார்ச் 31 அன்று நிதி மோசடி வழக்கில் Hero Motocorp நிறுவனத்தின் செயல் அதிகாரியின் இல்லத்தில் வருவாய்த் துறையினர் சோதனை நடத்திய நிலையில், அடுத்த சில நாட்களில்(10  ஜுலை 2022) அந்நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!