அழகன்குளம் சாமிதோப்பு செல்லும் சாலையில் விழும் நிலையில் உயர்அழுத்த மின் கம்பம்..

இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் சாமிதோப்பு செல்லும் சாலையில் நடேசன் தோப்பு அருகே உள்ள உயர் அழுத்த மின் கம்பம் அடிப்பாகம் உவர் நீரால் துருப்பிடித்து அபாய நிலையில் உள்ளது. விபரீதம் ஏற்படும் முன் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் கூறுகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வாகனம் மோதி சேதமடைந்த இந்த கம்பம் வளைந்து விட்டது. அதற்குரிய இழப்பீட்டு தொகையை வாகன உரிமையாளர் மின்வாரிய ஊழியர் மூலம் செலுத்தி விட்டார்” என பொது மக்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

செய்தி:- முருகன், கீழை நியூஸ், இராமநாதபுரம்.

———————————————————————