Home செய்திகள்கீழக்கரை செய்திகள் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்களின் தோல்வியை தாங்களே எழுதி கொள்கிறார்கள். தமிழிசை பேட்டி…

காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்களின் தோல்வியை தாங்களே எழுதி கொள்கிறார்கள். தமிழிசை பேட்டி…

by ஆசிரியர்

தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக கூட்டணியின்  வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டம்  தூத்துக்குடியில் நடைபெற  உள்ளது.

சங்கரபேரியில் அமைக்கப்படும் பொதுகூட்ட மேடை  பணியை பாஜக  மாநில தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற  தொகுதி  பா.ஜ.க வேட்பாளருமான தமிழிசை சௌந்தராஜன் பார்வையிடட்டார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் ”தூத்துக்குடி பாராளமன்ற பிரச்சாரம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. இது மக்களிடம் வரவேற்பையும் வெற்றியையும் பெற்று தரும். வரும் நாடாளமன்ற தேர்தலில் அதிமுக பா.ஜ.க கூட்டணி வெற்றி முகமாக உள்ளது. இரண்டு மிகப்பெரும் தலைவர்கள் தாமரைக்கு வாக்கு கேட்டு வருகிறார்கள். விளாத்திகுளம் இடைதேர்தலும் பா.ஜ.க அதிமுக கூட்டணியே வெற்றி பெறும். அனைத்து கட்சியின் தலைவர்களும் பிரச்சாரம் செய்வது பா.ஜ.க வலுப்பெறுகிறது. தூத்துக்குடிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் எனது கனவு திட்டம் நிச்சயம் நிறைவேறும்நடைமுறைப்படுத்த முடியாத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே பா.ஜ.க. அதே போல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் விதத்தில் பா.ஜ.க கட்சி செயல்படும். தேர்தலுக்குள் காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வரி உயர்த்தப்படும் சூழல் உருவாகும் . அதே போல் போட்டியிடுவதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து விட்டது.

அதே போல் திமுக தோல்வியை எழுதி கொள்வதில் காங்கிரஸ் கட்சியை விட வேகமாக உள்ளது. வாய்ப்பை கிடைத்தும் அதை செயல்படுத்த முடியாமல் இருக்கிறார் கனிமொழி. மக்கள் முதலில் எனக்கு வாய்ப்பு கொடுத்தால்  தூத்துக்குடியில் உள்ள வீட்டில் ஒருவருக்கு என்ற வேலை வாய்ப்பை எற்படுத்துவேன் என்றார். மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும், தேர்தல் வராமலேயே ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற ப.சிதம்பரம் கருத்து குறித்து  செய்தியாளர்கள் கேட்டதற்கு ப. சிதம்பரம் பாவம் கனவில் இருக்கிறார்” என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!