இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் அரசு டாக்டர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் வாக்களிப்பது என் உரிமை, கடமை என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலினி, கோட்டாட்சியர் சுமன், தாசில்தார் முத்துலட்சுமி, சுகாதார நலப்பணி இணை இயக்குநர் (பொ) ஸ்டீபன் சகாயராஜ், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவகர்லால், டாக்டர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.